01. மஹாராஷ்ட்டிரா: மும்பை தாராவி கிராஸ் ரோட்டில் லிப்டில் இருந்து வெளியே வந்த சிறுவன் லிப்ட் கதவு மூடும் போது இடுகையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தார்.

02. இந்தியாவின் எல்லை பகுதியான காஷ்மீர் ஆர்எஸ் புராவில் பாக்., டூரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் சுட்டதும் மீண்டும் பாக்., எல்லைக்குள் திரும்பியது.
03. சட்டீஸ்கர்: நக்சல் தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 7 பேர் காயமுற்றனர் .ஒருவர் பலியானார்.
04. ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை உறவினர்கள் பிடித்து துவம்சம் செய்தனர்.
05. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் மர்ம முறையில் இறந்த கிடந்தனர். குல்கம் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் ஸ்ரீநகர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
06. காஸியாபாத்தில் மக்கள் வசிக்கும் கவிநகர் பகுதிக்குள் சிறுத்தைப்புலி உலா வந்ததால் மக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் புலியை லாவகமாக பிடித்து வனத்திற்குள் விட்டனர் .

தமிழகத்தின் நிகழ்வு
01. சென்னை அருகே தாம்பரத்தில் வீட்டுவேலைக்கு வந்த பெண்ணை பாலியல் தொல்லை செய்த டாக்டர் தீபக் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
02. சேலம் சின்ன திருப்பதியில் நாய் கடித்த புகாரில் நாய் வளர்த்த உரிமையாளர் பிரபாகர் கைது செய்யப்பட்டார்.
03. அரியலூர்: கீழப்பழுவூர் பஸ்களை பஸ் ஸ்டாண்ட் வெளியே நிறுத்தியதால் ஆத்திரமுற்ற நபர்கள் டிரைவர் மற்றும் நடத்துனரை அடித்து உதைத்தனர்.
04. கார் வாங்கி மோசடி செய்த கார்பந்தய வீரர் பாலவிஜய் மற்றும் தரகர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
05. புதுக்கோட்டை திருமயத்தில் ஊருக்குள் சுற்றி தொல்லை கொடுத்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.
உலக நடப்பு
01. பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பகுதியில் நாயை கல்லில் கட்டி நதியில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE