இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிட்னி: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 389 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இன்று, சிட்னியில் 2வது போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு
AUSvsIND, IndiavsAustralia, Steve Smith, Australia,Maxwell,Bumrah,	Kohli, Jadeja,	Hardik,Warner, Aussies, Saini, Warner, 2nd ODI, Bumrah, Shami, Chahal,Dhoni

சிட்னி: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 389 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இன்று, சிட்னியில் 2வது போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு ஹென்ரிக்ஸ் தேர்வானார். இந்திய ‛லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் ‛பேட்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news




ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (60), டேவிட் வார்னர் (83) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் (104) சதம் கடந்தார். அடுத்த வந்த லபுசேன் (70), மேக்ஸ்வெல் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.


latest tamil news



ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 389 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் (63*), ஹென்ரிக்ஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
29-நவ-202017:28:54 IST Report Abuse
M.COM.N.K.K. நமது இந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவைபோல் சிறந்த ஆள் ரவுண்டர் இல்லை ஆகவேதான் நமது அணியால் வெற்றிபெற முடியவில்லை.நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவது சற்று குறைவுதான்.கபில்தேவ் மாதிரி ஒரு ஆள் ரவுண்டர் எப்போது வருவாரோ தெரியவில்லை.அப்படி வரும்போது நமது இந்திய அணி கண்டிப்பாக அதிக வெற்றிகளை பெரும்.அதுவரை நாம் காத்திருப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X