புதுடில்லி: பேச்சுவார்த்தைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விதித்த நிபந்தனையை ஏற்க. டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டில்லி சலோ' என்ற பெயரில் டில்லிக்கு பேரணியாக கிளம்பினர். ஹரியானா எல்லையில் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடுக்க போலீசார் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டில்லியின் புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள், , சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. போராட்ட இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டிச.,3ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதற்குஅனைத்து விவசாயிகளும் போராட்டம் நடத்த அரசால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்க மறுத்துள்ள விவசாய சங்கங்கள், விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என மத்திய அரசு உறுதியாக இருந்தால், நிபந்தனை ஏதும் போடக்கூடாது. வேளாண் சட்டத்தால் கிடைக்கும் பயன் குறித்து விளக்கப்படும் எனக்கூறுவதை நிறுத்த வேண்டும். மத்திய அரசு திறந்த மனதுடன், இந்த பிரச்னையை அணுக வேண்டும். பிரச்னைக்கு உள்ள தீர்வை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கையில் தெளிவாக உள்ளனர். இவ்வாறு அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE