இந்திய அணி மீண்டும் தோல்வி: தொடரை வென்றது ஆஸி.,

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சிட்னி: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஏமாற்றிய இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 2-0 என, தொடரை கைப்பற்றியது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி சிட்னியில் நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு
AUSvsIND, IndiavsAustralia, Steve Smith, Australia, Maxwell, Bumrah,	Kohli, Jadeja,	Hardik,Warner, Aussies, Saini, Warner, 2nd ODI, Bumrah, Shami, Chahal,Dhoni

சிட்னி: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஏமாற்றிய இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 2-0 என, தொடரை கைப்பற்றியது.


latest tamil news



ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி சிட்னியில் நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு ஹென்ரிக்ஸ் தேர்வானார். இந்திய ‛லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் ‛பேட்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news


ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (60), டேவிட் வார்னர் (83) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் (104) சதம் கடந்தார். அடுத்த வந்த லபுசேன் (70), மேக்ஸ்வெல் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 389 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் (63*), ஹென்ரிக்ஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


latest tamil news


கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (30), மயங்க் அகர்வால் (28) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் (38) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் விராத் கோஹ்லி (89), லோகேஷ் ராகுல் (76) அரைசதம் கடந்தனர். ஹர்திக் பாண்ட்யா (28), ரவிந்திர ஜடேஜா (24) சோபிக்கவில்லை. ஷமி (1), பும்ரா (0) ஏமாற்றினர்.இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 338 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சைனி (10), சகால் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3, ஹேசல்வுட், ஜாம்பா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.மூன்றாவது போட்டி வரும் டிச. 2ல் கான்பெராவில் நடக்கிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களூர் அவனுக பணத்துக்காக மட்டும் தான் விளையாடுறானுக , நாட்டுக்காக இல்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202003:35:07 IST Report Abuse
J.V. Iyer ஆஸ்திரேலியா அணி இந்திய அணியைவிட பல மடங்கு சிறந்தது. மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-நவ-202023:52:07 IST Report Abuse
Vena Suna இவர்களை நம்பி பார்க்க முடியாது...அதனால் தான் கிரிக்கெட்டை பார்ப்பதில்லை...தோனி இருந்தால் வென்றிருப்பர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X