சியோல்: தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை துவங்கிவிட்டது.
முதல் அலை சற்று ஓய்ந்ததும் உலக நாடுகள் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பொதுமக்களை வேலைக்கு செல்ல அனுமதித்தது. தற்போது இரண்டாம் அலை அதிகரித்துள்ளதால் தென்கொரியாவில் அத்தியாவசிய அங்காடிகள் தவிர பார்கள், கிளப்புகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மூன் ஜே இன் அரசு தென்கொரியர்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இன்று புதிதாக 450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் 500 க்கும் மேற்பட்ட தென் கொரியர்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவின் நோய்தடுப்பு ஏஜென்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் கொண்டாட்டங்களையும் இசை நிகழ்ச்சிகளையும் இரண்டாவது அலையை முன்னிட்டு தென்கொரிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆசிய கண்டத்தின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக விளங்கும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சாமர்த்தியமாக கையாளப்பட்டு தெற்காசிய நாடுகள் மத்தியில் முன்னதாகப் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE