பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீப திருவிழா, முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடந்தது. திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில் மகா தீப திருவிழா நடந்தது. கோவிலினுள் பஞ்ச மூர்த்திகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இதில் அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்நிகழ்வுக்கு கோவிலுக்குள் மட்டும், 10 ஆயிரம் பேர்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் மகா தீப திருவிழா, முதல் முறையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடந்தது.latest tamil news
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில் மகா தீப திருவிழா நடந்தது. கோவிலினுள் பஞ்ச மூர்த்திகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இதில் அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்நிகழ்வுக்கு கோவிலுக்குள் மட்டும், 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.


latest tamil newsதிருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று (நவ.29) அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் கணேசன் குருக்கள் கையிலேந்தி உள்ள பரணி தீபம் மடக்கில் ஜோதி ரூபமாய் இருக்கும் “அண்ணாமலையார்” சன்னதி வெள்ளி கதவு அருகே தீபமாக காட்சியளித்தார்.


latest tamil newsஇதையடுத்து மாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப்போது அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார்.


latest tamil newsகாலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


latest tamil news
கோவில் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முக்கிய உபயதாரர்கள், அரசியல் கட்சியினர், சுவாமி பல்லக்கு துாக்குபவர்கள் என, 2,500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை, நகர எல்லைப்பகுதி என, அனைத்து பகுதிகளிலும், போலீசார் மட்டுமே, அதிகமாக காணப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
29-நவ-202021:53:32 IST Report Abuse
பேப்பர்காரன் நமசிவாய
Rate this:
Cancel
29-நவ-202020:11:24 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு என்னைக்கு வேல் என்று A / சி காரில் வேல் போச்சோ அன்றே எல்லாம் போச்சு , அமித் வந்தார் நாடு வெள்ளக்காடு இவரை யார் வர சொன்னது இயற்கைக்கே பொறுக்கலை
Rate this:
சீனி - Bangalore,தாய்லாந்து
30-நவ-202010:37:21 IST Report Abuse
சீனிஅண்ணாமலைக்கும், அமித்ஷாவுக்கும் என்ன தொடர்பு ? இந்தியா முழுதும் இலவசமா கொரோணா பரப்பியது தப்லிக்குகள், அதை மக்கள் மக்கள் மறந்து பல மாசமாச்சு..... பாபர் அக்பர் காலத்தில இருந்து எல்லாம் முயற்சி பண்ணுறாங்க இந்துக்களை இந்த நாட்டை விட்டு ஒழிக்க முடியலை, இனிமேலும் முடியாது....
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அண்ணாமலையார்க்கு அரோகரா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X