கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை!

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சிங்கப்பூர்: கர்ப்பிணி பெண் ஒருவர் மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் காணப்படுகிறது.புதிய கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளர்களால் இன்னமும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத அளவிலேயே உள்ளது. இருப்பினும் வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பரிசோதனை இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

சிங்கப்பூர்: கர்ப்பிணி பெண் ஒருவர் மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் காணப்படுகிறது.



latest tamil news



புதிய கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளர்களால் இன்னமும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத அளவிலேயே உள்ளது. இருப்பினும் வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பரிசோதனை இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் அவை பரவலாக கிடைக்கக்கூடும். இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் இம்மாதம் குழந்தை பெற்றார். அவரது குழந்தைக்கு கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருந்துள்ளன. இதனை அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை உறுதி செய்துள்ளது. கர்ப்ப காலத்தில் அவரிமிருந்து கருவிலிருந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பாற்றல் கடத்தப்பட்டிருப்பதாக நம்புகின்றனர்.
கொரோனா தொற்று உடைய கர்ப்பிணிப் பெண் பிரசவத்தின் போதோ அல்லது கர்ப்ப காலத்திலோ தனது கருவுக்கு வைரஸை கடத்த முடியுமா என்பது பற்றி இதுவரை தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதுவரை குழந்தையைச் சுற்றியுள்ள கருப்பை திரவத்தில் அல்லது தாய்ப்பால் திரவ மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதற்கான ஆன்டிபாடிகளுடன் பிறப்பதை ஏற்கனவே சீனாவில் உள்ள மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவது அரிதானது என ஜமா குழந்தை மருத்துவ இதழில் அக்டோபர் மாதம் கூறியுள்ளனர். இதனை தற்போது சிங்கப்பூர் அரசு மருத்துவமனையும் உறுதிப்படுத்தியுள்ளது..

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விருமாண்டி - மதுரை,இந்தியா
30-நவ-202002:33:07 IST Report Abuse
விருமாண்டி சீன வைரஸ் ....
Rate this:
Cancel
29-நவ-202023:28:10 IST Report Abuse
ஆரூர் ரங் பெண் பிள்ளைகளுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு 👍🏻சக்தி மிக அதிகம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-நவ-202022:25:08 IST Report Abuse
Ramesh Sargam இங்குதான் நாம் ஒன்று புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X