சிட்னி மைதானத்தில் இந்திய-ஆஸி ஜோடி சம்பவம்: இணையத்தில் வைரல்

Updated : நவ 29, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் ஆஸியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இந்தியர் காதலை வெளிப்படுத்திய சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் முறை ரசிகர்கள் கூட்டத்தோடு இந்த தொடர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான

சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் ஆஸியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இந்தியர் காதலை வெளிப்படுத்திய சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.



latest tamil news



இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் முறை ரசிகர்கள் கூட்டத்தோடு இந்த தொடர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியபோது இந்த சம்பவம் நடந்தது.
மைதானத்தில் இந்தியர் ஒருவரும், ஆஸ்திரேலிய பெண் ஒருவரும் உடன் இருந்தனர். கேமரா தன்னை நோக்கி திரும்பியதும், அந்த இந்திய இளைஞர் எழுந்து நின்று அந்த பெண்ணை பார்த்தார். அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார்.தான் கொண்டு வந்திருத்த மோதிரத்தை காட்டி அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்தார். இதை பார்த்ததும் உற்சாகம் அடைந்த ஆஸ்திரேலிய பெண் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அனைத்தும் பெரிய திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. களத்தில் இருந்த கோலி, மேக்ஸ்வெல் போன்ற எல்லோரும் இந்த அழகான சம்பவத்தை பார்த்தனர். மைதானம் மொத்தமாக ஆரவாரமாக குரல் எழுப்பியது.


latest tamil news



மேக்ஸ்வெல் உற்சாகத்தில் கைதட்டி அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-நவ-202017:41:48 IST Report Abuse
Endrum Indian இது ஏற்கனவே சொல்லி நடந்த வீடியோ காட்சி சம்பவம் இது ஒன்றும் பெரிய அதிசயமில்லை மார்க்கெட்டிங் எந்த லெவெலுக்கும் போகும் என்பதை இது காட்டுகின்றது
Rate this:
Cancel
30-நவ-202016:16:18 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) காதல் எப்போதும் இனிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
30-நவ-202016:15:47 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) ஒரு நாளில் உலகம் பூராவும் தெரிந்து விட்டார்கள் ( கிரிக்கெட் பார்ப்பவர்களிடம் )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X