திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தானம், தனக்கு கீழுள்ள நிலங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
![]()
|
திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் பலர் நன்கொடையாக நிலங்கள் வழங்கி உள்ளனர்.
இதற்கான விபரங்கள் அனைத்தும் நன்கொடைக்கான பதிவேட்டில் குறித்து வைக்கப்பட்டுஉள்ளன.ஆயினும், தேவஸ்தானத்திடம் உள்ள நிலங்களை பலர் ஆக்கிரமித்து, கையகப்படுத்தியும்உள்ளனர்.
இதையடுத்து, தேவஸ்தானம், 1974 முதல், தற்போது வரை, தன்னிடம் உள்ள நிலங்களின்
பட்டியலை பதிவேட்டின்படி, 'சர்வே' செய்து, வெள்ளை அறிக்கையை தயாரித்து உள்ளது.
அந்த அறிக்கையை நேற்று முன்தினம் நடந்த அறங்காவலர் குழுவின் ஒப்புதல் பெற்று, தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
![]()
|
அதில் உள்ள விபரங்களின் படி, தேவஸ்தானத்திடம் உள்ள நிலங்கள் 1,128, அதன் மொத்த
பரப்பளவு, 8,088 ஏக்கர், 89 சென்ட். அதில், 233 விவசாய நிலங்கள் உள்ளன; அவற்றின் பரப்பளவு, 2,085 ஏக்கர், 41 சென்ட்.ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு, மீண்டும் கையகப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 'இந்த வெள்ளை அறிக்கையை, பக்தர்கள், www.tirumala.org என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்' என, தேவஸ்தானம்தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE