வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு:'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம்

Updated : டிச 01, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (9+ 11)
Share
Advertisement
புதுடில்லி:'' மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன,'' என, பிரதமர் மோடி, பெருமிதத்துடன் கூறினார். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று, வானொலியில், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான
வேளாண் சட்டங்கள், விவசாயிகள், புதிய வாய்ப்பு, மன் கி பாத், நிகழ்ச்சி, பிரதமர் பெருமிதம்

புதுடில்லி:'' மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன,'' என, பிரதமர் மோடி, பெருமிதத்துடன் கூறினார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று, வானொலியில், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று, 71-வது மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, பல ஆண்டுகளாக அனைத்து கட்சிகளும் உறுதியளித்து வந்தன.


நடைமுறை

ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள், தற்போது தான் நிறைவேற்றப் பட்டு உள்ளன. நீண்ட விவாதங்களுக்குப் பின், பார்லிமென்டில் புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றப் பட்டன. இந்த சீர்திருத்தம், விவசாயிகளுக்கு புதிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.விவசாயிகளிடம் பொருட்களை வாங்குவோர், அதற்கான விலையை கொடுக்காமல், பல மாதங்கள் பாக்கி வைத்திருப்பார்;

இது தான், நீண்ட நாட்கள் நடைமுறையில் இருந்தது. ஆனால், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, விவசாயிகளிடம் பொருட்களை வாங்குவோர், அதற்கான தொகையை, மூன்று நாட்களில் வழங்க வேண்டும்.


தீர்வு காண வேண்டும்

தவறினால், அவர் மீது, சம்பந்தப்பட்ட விவசாயிகள் புகார் அளிக்கலாம். அந்த புகாரை பெற்ற பின், ஒரு மாதத்தில், மாவட்ட கலெக்டர் தீர்வு காண வேண்டும்.கொரோனா வைரசால், உலகின் முதல் நபர் பாதிக்கப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

ஊரடங்கில் இருந்து நாம் வெளியே வந்து, கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா குறித்த எந்த கவனக்குறைவும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி, விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.நம் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சாஸ்திரங்கள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள், உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளன.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டுக்கு வந்து, இந்த சாஸ்திரங்களை, பாரம்பரியத்தைக் கற்கின்றனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோனாஸ் மசேட்டி எனப்படும் விஸ்வநாத், தமிழகத்தின் கோவையில் உள்ள அர்ஷ வித்யாலயா குருகுலத்தில், நான்கு ஆண்டுகள் தங்கி, வேதாந்த தத்துவத்தை படித்தார். தான் படித்தவற்றை, நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, தற்போது பரப்பி வருகிறார்.


தீவிர நடவடிக்கைநியூசிலாந்தில், எம்.பி. கவுரவ் சர்மா, சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்றார். நம் பாரம்பரியமிக்க மற்றும் விலை மதிப்புமிக்க மரபு சின்னங்களும், அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில், தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாரணாசியிலிருந்து, 100 ஆண்டுகளுக்கு முன் அன்னபூர்ணா தேவி சிலை, கனடாவுக்குக் கடத்தப்பட்டது. அந்தச் சிலை மீட்கப்பட்டு, விரைவில் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட உள்ளது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

டாக்டர் சலீம் அலியின், 125வது பிறந்த ஆண்டை கொண்டாடி வருகிறோம். அவர், பறவைகள் உலகில் பறவைகள் கண்காணிப்பில், அருஞ்செயல்களை ஆற்றியவர். உலகின் பறவைகள் கண்காணிப்பாளர்களை, நம் நாட்டை நோக்கி ஈர்த்தவர். உலகம் முழுதும் உள்ள சீக்கியர்கள் குருநானக் ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர். டிச., 5ல், ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாள் வருகிறது. அவரது தத்துவங்கள், கொள்கையில், சுதேசிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது; அதைத்தான், தற்போது மத்திய அரசு வலியுறுத்தி, உள்நாட்டுப் பொருட்களுக்கு, தொழில்களுக்கு ஆதரவு கோரி வருகிறது.


நினைவு

டிச., 6ல், அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அன்றைய நாளில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், தேசத்துக்கும், அவர் அளித்த பங்களிப்பை நினைவுபடுத்த வேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.


வைக்கோலால் ரூ.50 லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி

விவசாய கழிவான வைக்கோலை விவசாயிகள் எரிப்பதால், டில்லி, உத்தர பிரதேச மாநிலங்கள், கடும் காற்று மாசால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், வைக்கோலை விற்று, 50 லட்ச ரூபாய் லாபம் ஈட்டிய விவசாயி பற்றி, மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்; அவர் கூறியதாவது:

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர யாதவ் ஜி. ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த அவர், இரண்டு ஆண்டுக்கு முன், ஹரியானாவுக்கு திரும்பினார். வைக்கோலை எரிப்பதால் மாசு ஏற்படுவதை அறிந்து அதிர்ச்சியடைந்த வீரேந்திர யாதவ், இதற்கு தீர்வு காண முயற்சித்தார். வைக்கோலை கட்டு கட்டுகளாக கட்டுவதற்கான இயந்திரத்தை வாங்கினார். இதற்கு, அவருக்கு விவசாயத்துறை நிதியுதவி செய்தது.

இந்த இயந்திரத்தின் வாயிலாக, வைக்கோல்களை கட்டு கட்டாக கட்டி, அவற்றை, விவசாய கழிவுகள் மூலம் எரிசக்தி தயாரிக்கும் ஆலைகளுக்கும், காகித ஆலைகளுக்கும் விற்பனை செய்தார். இதன் வாயிலாக அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில், 50 லட்ச ரூபாய் லாபம் ஈட்டிஉள்ளார். இவ்வாறு, பிரதமர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
30-நவ-202018:48:17 IST Report Abuse
கொக்கி குமாரு ஒன்றை கவனித்தீர்களா? பஞ்சாப், ஹரியானா தவிர வேறு எந்த மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் போராடவில்லை. காரணம், பஞ்சாப்பில் மொத்த வியாபாரிகள் விவசாயிகள் போர்வையில் ஒளிந்துகொண்டு காங்கிரஸ் தூண்டுதலில் போராட்டம் செய்கிறார்கள். அவர்கள் வருவது பார்சூனர், ஆடி, BMW கார்களில். இவர்கள் தான் ஏழை விவசாயிகளாம்? காங்கிரஸ் எவ்வளவு சம்மட்டி அடி வாங்கினாலும் திருந்தாதுபோல.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
30-நவ-202018:20:21 IST Report Abuse
Rajas /////ஆனால், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, விவசாயிகளிடம் பொருட்களை வாங்குவோர், அதற்கான தொகையை, மூன்று நாட்களில் வழங்க வேண்டும். தவறினால், அவர் மீது, சம்பந்தப்பட்ட விவசாயிகள் புகார் அளிக்கலாம். அந்த புகாரை பெற்ற பின், ஒரு மாதத்தில், மாவட்ட கலெக்டர் தீர்வு காண வேண்டும்.///// இது ஏற்கனவே கரும்பு சட்டத்தில் இருக்கிறதே. அதில் 14 நாட்கள். இங்கு 3 நாட்கள். கரும்பு சட்டத்தில் அப்படி இருந்தும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கரும்பு மில்லிலிருந்து பணம் விவசாயிகளுக்கு வர வேண்டி இருக்கிறது.
Rate this:
Cancel
30-நவ-202011:34:03 IST Report Abuse
தமிழ் எதிர்ல யாரும் இல்லநாமட்டும் கப்ஸா விடவேண்டியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X