அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட ஜோ பைடன் 306 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று மாபெரும் சாதனை படைத்தார். வரும் ஜனவரி 20ஆம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்காத முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ளார்.
ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களுக்கும் இதர சிறுபான்மை மக்களுக்கும் முக்கிய பதவியை தனது அவையில் வழங்க விரும்புகிறார். இதனாலேயே அவர் அமெரிக்க சிறுபான்மையினர்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றார். எனவேதான் அவர்களது வாக்குகளை கவர்ந்து அவர் மாபெரும் வெற்றி பெற முடிந்தது. தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தன்னார்வலர் மற்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி தலைவராக 24 வருடங்கள் பதவி வகித்தவருமான முஸ்தபா சாண்டியாகோ அலி வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக நியமிக்க பரிசீலித்து வருகிறார் பைடன்.

இஸ்லாமியரான முஸ்தபா, பல ஆண்டு காலமாக சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க போராடிய சமூக ஆர்வலர் ஆவார். மேலும் சிறுபான்மையின மக்கள்மீது சுற்றுச்சூழல் விவகாரத்தில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையைத் தவிர்க்க குரல் கொடுத்தவர். இஸ்லாமியர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற முஸ்தபாவுக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி அளிக்க முடிவு எடுத்துள்ளார். இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கருப்பின மக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் அமெரிக்க அரசியலில் சம உரிமை வழங்கும் நோக்கில் ஜோ பைடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE