அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின்

Updated : டிச 01, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
சென்னை:''தொழில் துறையினர் விரும்பும் திட்டங்களை செயல்படுத்தும் அரசாக, தி.மு.க., அரசு இருக்கும்,'' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசினார்.திருப்பூரில் நடைபெற்ற, 'தமிழகம் மீட்போம்' தேர்தல் பிரசார கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு, மிக முக்கியமான பங்களிப்பை செய்கிற மாவட்டமாக, திருப்பூர் மாவட்டம், பல
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை:''தொழில் துறையினர் விரும்பும் திட்டங்களை செயல்படுத்தும் அரசாக, தி.மு.க., அரசு இருக்கும்,'' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருப்பூரில் நடைபெற்ற, 'தமிழகம் மீட்போம்' தேர்தல் பிரசார கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு, மிக முக்கியமான பங்களிப்பை செய்கிற மாவட்டமாக, திருப்பூர் மாவட்டம், பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், பத்தாண்டு காலமாக, அதிலும் குறிப்பாக, ஐந்தாண்டு காலமாக பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறு, குறு நிறுவனங்களாக இருந்தாலும், அவை செயல்பட முடியாமல், மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி வருகின்றன.

அதற்கு, மத்திய பா.ஜ., அரசும், மாநிலத்தை ஆளும், அ.தி.மு.க., அரசும் தான் முழு முதற் காரணம்.கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வேளாண்மை, தொழில் துறை, ஏற்றுமதி, வர்த்தகம் என, அனைத்து துறையிலும், ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை உருவாக்கி தரும் ஆட்சியாக, தி.மு.க., ஆட்சி அமையும். தொழில் துறையினர் விரும்பும் கனவுகளை செயல்படுத்திக் காட்டும் ஆட்சியாக, தி.மு.க., ஆட்சி அமையும்.இவ்வாறு, அவர் பேசினார்.


சமஸ்கிருதம் திணிப்பு


ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாள்தோறும் சமஸ்கிருத செய்தி தொகுப்பை, தமிழின் பொதிகை, 'டிவி'யிலும், பிற மாநில மொழி, 'டிவி'க்களிலும் ஒளிபரப்ப வேண்டும் என, துார்தர்ஷன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது, மொழி ஆதிக்கத்தின் ஒளி, ஒலி வடிவமாக திகழ்கிறது.செய்தி அறிக்கைகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும், ஹிந்தி மொழி திணிக்கப்பட்ட போது, 'டிவி' பெட்டிகளை உடைத்து, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய கட்சி இது.

சமஸ்கிருத திணிப்பை திரும்பப் பெறாவிட்டால், உடையப் போவது, 'டிவி' பெட்டிகள் அல்ல. தாய்மொழியை உயிரென கருதும் மக்களின் பங்கேற்புடன், மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும், அதிகார மமதையும் தான் என, தி.மு.க., எச்சரிக்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
30-நவ-202022:30:14 IST Report Abuse
Balaji ஷப்ப்பா ... இந்தாளோட பேறே சமஸ்க்ரித எழுத்து இல்லாம எழுத முடியாது.. சரியாத்தான் பகவான் வெச்சி செஞ்சிருக்கான் இந்த போலி மொழித்தியாகிய... ஒரு நாளைக்கு 15 மணி நேரம் மின்வெட்டு, இண்டஸ்ட்ரியல் டீசல் என்கிற பெயரில் ஒரு லிட்டர் 80 என்று 2006 கால கட்டத்திலேயே விற்றது... ஜெனெரேட்டர் ஓட்டி ஆகவேண்டிய கட்டாயத்தில் டீசல் வாங்கிய கம்பெனிகள்.. அசரவைக்கும் லஞ்ச எதிர்பார்ப்பு.. ஷாப்ப்பா கண்ண கட்டுதே...
Rate this:
Cancel
Nagashivam - Thiruvallur,இந்தியா
30-நவ-202020:13:52 IST Report Abuse
Nagashivam சமஸ்கிரத மொழி தெரிந்து பார்ப்பவர்களை தடுக்க நீங்கள் யார்? டிவி சேனல் செய்தியை கூட நீங்கள் சொல்வதை கேட்டுத்தான் பார்க்கவேண்டுமா? ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகமான பேசும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள்?
Rate this:
Cancel
Nagashivam - Thiruvallur,இந்தியா
30-நவ-202020:00:59 IST Report Abuse
Nagashivam மத்திய அரசின் பொதிகை டிவியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி ஒளிபரப்பப்பினால் உங்களுக்கு என்ன நஷ்டம். உங்களை யாரும் அந்த செய்தியை பாருங்கள் என்று வற்புறுத்தவில்லையே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X