அரசின் நிபந்தனை பேச்சு நிராகரிப்பு: தொடரும் விவசாயிகள் போராட்டம்

Updated : டிச 01, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:பேச்சு நடத்துவதற்கு, போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றும் அரசின் நிபந்தனையை ஏற்க, விவசாயிகள் மறுத்துள்ளனர். டில்லி எல்லையில் நான்காவது நாளாக நேற்றும், அவர்களது போராட்டம் தொடர்ந்தது.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டில்லி சலோ' என்ற பேரணி,
farmers_strike, Delhi, farmers

புதுடில்லி:பேச்சு நடத்துவதற்கு, போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றும் அரசின் நிபந்தனையை ஏற்க, விவசாயிகள் மறுத்துள்ளனர். டில்லி எல்லையில் நான்காவது நாளாக நேற்றும், அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டில்லி சலோ' என்ற பேரணி, போராட்டத்தை நடத்தப் போவதாக, பஞ்சாபை சேர்ந்த, பல்வேறு விவசாய சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.அதன்படி, பஞ்சாபில் இருந்து டில்லி புறப்பட்ட பேரணிக்கு, ஹரியானாவில் அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி, பேரணி தொடர்ந்தது.

டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியின் எல்லையான சிங்கு மற்றும் டிக்ரி எல்லைப் பகுதியில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.'விவசாய பிரதிநிதிகளுடன், டிச., 3ல் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்.டில்லியின் புராரியில், அரசு நிர்ணயித்துள்ள இடத்துக்கு போராட்டத்தை மாற்றினால், முன்னதாகவே பேசத் தயார்' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா, அறிவித்திருந்தார்.

ஆனால், இதை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக டில்லியின் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறிய தாவது:பேச்சு நடத்துவதற்கு நிபந்தனை விதிப்பது, எங்களை அவமதிப்பதாகும். எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சு நடத்த வேண்டும். புராரி மைதானம் ஒரு திறந்தவெளி சிறை. அங்கு போராட்டத்தை நடத்த தயாராக இல்லை.அரசின் நிபந்தனை பேச்சை ஏற்க முடியாது. தொடர்ந்து எல்லையிலேயே போராட்டத்தில் ஈடுபடுவோம். டில்லிக்கு நுழையும் ஐந்து இடங்களையும் மறிப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


வலியுறுத்தல்

இந்தப் பிரச்னை தொடர்பாக, 32 பஞ்சாப் விவசாய சங்கங்களுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா, கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியிருந்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:எல்லையில் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

தற்போது கடுமையான குளிர் உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவலும் உள்ளது. விவசாயிகளின் நலனை மனதில் வைத்தே, புராரியில் உள்ள மைதானத்தில் போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு, தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.இதற்கிடையே, டிச., 3ல் பேச்சு நடத்துவதற்கு, மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


'அரசியல் காரணமில்லை'

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கும் நோக்கில் தான், புதிய வேளாண் சட்டங்கள் அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்த சட்டங்களால், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளும், சுதந்திரமும் கிடைத்துள்ளது. இதை அரசியல்ரீதியாக எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும். விவசாயிகள் போராட்டத்துக்கு அரசியல் காரணம் என, நான் ஒரு போதும் கூறியதில்லை; கூறவும் மாட்டேன். விவசாயிகளுடன் பேச, அரசு தயாராக உள்ளது; ஆனால், அதற்கான இடத்துக்கு, அவர்கள் செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஓட்டலில் இலவசம்ஹரியானாவின் முர்தால் பகுதியில் உள்ள ஆர்மிக் சுக்தேவ் என்பவரது ஓட்டல், மிகவும் பிரபலம். போராட்டத்தில் பங்கேற்பதற்காக செல்லும் விவசாயிகளுக்கு, இந்த ஓட்டலில் இலவச உணவு வழங்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


'சட்டங்களை புரிந்து கொள்ளவில்லை'

டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து, 'நிடி ஆயோக்' தலைவர் ரமேஷ் சந்த் கூறியதாவது:மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை, விவசாயிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்த சட்டங்களால், அவர்களது வருமானம், இரு மடங்காக அதிகரிக்கும் என்பது உறுதி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
30-நவ-202016:32:37 IST Report Abuse
sankaseshan All these people are paid by opposition parties to give trouble to the government . If you ask them about agriculture law they can't answer. Government should deal with them sternly . Winter is going to be severe in coming days They themselves will wind up agitation .
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
30-நவ-202015:10:43 IST Report Abuse
A.Gomathinayagam இன்று பேச்சு வார்த்தைக்கு அழைப்பதிற்கு பதில் சட்டங்கள் இயற்றுவதற்கு முன் அணைத்து இந்திய விவசாயிசங்கங்களையும் அழைத்து பேசி ,அவர்கள் ஒப்புதலுடன் சட்டத்தை நிறைவேற்றி இருந்தால் ,இந்த போராட்டம் தவிர்க்க பட்டிருக்கும்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
30-நவ-202013:08:34 IST Report Abuse
Sridhar அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது. அந்த பயத்தை உபயோகப்படுத்தி, அந்நிய மற்றும் தேசவிரோத கும்பல்கள் போராட்டத்தை வலுப்படுத்த நினைக்கின்றன. இதனால், அங்குள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மிக அதிகம். இம்மாதிரியான ரௌடிகளின் போராட்டங்களை முறியடிக்க பொதுமக்களும் நல்ல விவசாயிகளும் தான் முன்வரவேண்டும். புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள். சொல்லப்போனால், விவசாயம் சம்பந்தப்பட்ட அணைத்து பிரச்சனைகளும் ஒரே வருஷத்தில், ஏன் ஒரே போகத்தில் மறைந்துபோகும் வாய்ப்புகள் அதிகம். உண்மை நிலவரம் அவ்வாறு இருக்கையில், மற்ற விவசாயிகள் ஏன் வெகுண்டு எழாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என புரியவில்லை. மக்கள் சுகாதாரம் மற்றும் காற்றுமாசு பற்றி சிறிதும் கவலைப்படாமல், விவசாய கழிவுகளை எரித்து அநியாயம் செய்த இந்த பஞ்சாபை சேர்ந்த போராடும் 'விவசாயி'களை, பொதுமக்கள் ... கொண்டு கடித்து விரட்டி அடிக்க செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X