பொது செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணி பாலத்துக்கு வயது 178: வாடகை வீட்டில் 'வள்ளல்' குடும்பம்

Updated : நவ 30, 2020 | Added : நவ 29, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
திருநெல்வேலி: தாமிர பரணி ஆற்றுப்பாலம் கட்ட, நிதி வழங்கிய சுலோச்சன முதலியாரின் ஆறாம் தலைமுறை வாரிசுகள், இன்னும் வாடகை வீட்டிலேயே வசிக்கின்றனர்.திருநெல்வேலி மாநகரில் பாயும் தாமிரபரணி ஆற்றை, 1800 காலகட்டத்தில் பரிசல்கள் வாயிலாக, பொதுமக்கள் கடந்து சென்றனர்.50 ஆயிரம் ரூபாய்பரிசலில் உட்கார்ந்து செல்வது யார், நின்றபடி செல்வது யார் என, ஜாதி மோதல் வெடித்து, உயிர்
தாமிரபரணி, பாலம், வாடகை வீடு, வள்ளல், குடும்பம்

திருநெல்வேலி: தாமிர பரணி ஆற்றுப்பாலம் கட்ட, நிதி வழங்கிய சுலோச்சன முதலியாரின் ஆறாம் தலைமுறை வாரிசுகள், இன்னும் வாடகை வீட்டிலேயே வசிக்கின்றனர்.

திருநெல்வேலி மாநகரில் பாயும் தாமிரபரணி ஆற்றை, 1800 காலகட்டத்தில் பரிசல்கள் வாயிலாக, பொதுமக்கள் கடந்து சென்றனர்.


50 ஆயிரம் ரூபாய்

பரிசலில் உட்கார்ந்து செல்வது யார், நின்றபடி செல்வது யார் என, ஜாதி மோதல் வெடித்து, உயிர் பலிகள் ஏற்பட்டன. 1836ல், கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் புதிய பாலம் கட்ட முயற்சித்தார்; நிதி இல்லை. பின், 1840ல், கலெக்டராக வந்த தாம்சன், பொதுமக்களிடம் நிதி பெற முடிவு செய்தார். இந்நிலையில், கலெக்டரிடம் மொழி பெயர்ப்பாளராக இருந்த சுலோச்சனம் முதலியார், நிதி தருவதாக உறுதியளித்து, முதற்கட்டமாக மனைவி வடிவம்மாளின் நகைகள், குடும்ப சொத்துக்கள் வாயிலாக கிடைத்த, 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.தாமிரபரணி பாலம் கட்டப்பட்டது; 1843ல் பயன்பாட்டிற்கு வந்தது.

சுலோச்சனம் முதலியாரை பாராட்டிய கலெக்டர் தாம்சன் செப்பு பட்டயம் வழங்கியதோடு, பாலத்தில் கல்வெட்டு வைத்தார்.செப்பு பட்டயம், தாமிரபரணி பால வடிவமைப்பு வரைபடம் போன்றவற்றை, சுலோச்சன முதலியாரின் பேரன் பக்தவச்சலம் இன்னும் பாதுகாத்து வருகிறார்.

சமீபத்தில், பாலத்துக்கு, 178வது பிறந்த நாள். இந்நிகழ்ச்சியில், சுலோச்சன முதலியாரின் பேரன் பக்தவச்சலம், 63, அவரது மனைவி கமலா, மகள் கிருத்திகா, கமலாவின் தம்பி ரமணன் ஆகியோர் முதன் முறையாக பங்கேற்றனர்.திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு, அவர்களுக்கு சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில், பாலம் குறித்த சி.டி., வெளியிடப்பட்டது.


வறுமையில் தவிப்புசுலோச்சன முதலியாரின் தந்தை ராமலிங்க முதலியார், கட்டபொம்மன் காலத்தில், ஆங்கிலேயரிடம் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். சென்னை அருகே திருமணம் கிராமத்தை சேர்ந்த செல்வந்தர் குடும்பம். தந்தையின் பணிக்காக, திருநெல்வேலிக்கு வந்தவர்கள், அங்கேயே தங்கினர். ஆறாவது தலைமுறை பேரனான பக்தவச்சலம் குடும்பத்தினர், தற்போது வறுமையில் உள்ளனர்.

பக்தவச்சலம் கூறியதாவது:என் தாத்தா வழங்கிய நன்கொடையால், எங்கள் குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. நான், 1964 வரை திருநெல்வேலி வண்ணார்பேட்டை குண்டலகேசி தெருவில் வசித்தேன். பின், சொந்த ஊரான திருமணம் சென்று விட்டோம். நான் போஸ்ட் ஆபிசில் கூடுதல் பணியாளராக திருக்கழுக்குன்றத்தில் பணியாற்றுகிறேன்.வாடகை வீட்டில் வசிக்கிறோம். மகள் கிருத்திகா எம்.ஏ., படித்துள்ளார். மகளுக்கு அரசுப்பணி கிடைத்தால் மகிழ்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வாடகை வீட்டில் வசிக்கும், சுலோச்சனம் முதலியாரின் வாரிசுகளை வறுமையில் இருந்து மீட்டெடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்குவது போல, சமூகத்திற்கு நேசக்கரம் நீட்டியவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் உதவ வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
03-டிச-202013:17:03 IST Report Abuse
Shaikh Miyakkhan இவர்களை போன்று சமுதாய பணிகள் செய்தவர்களை ராஜசபை உறுப்பினராக நியமித்தால் அவர்கள் சுயநலம் இல்லமால் சமுதாய பணிகள் செய்வார்கள் .
Rate this:
Cancel
Ravi.R - Singhboum,இந்தியா
02-டிச-202018:50:59 IST Report Abuse
Ravi.R அரசு இதை கட்டாயமாக செய்யவேண்டும். இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். அன்புடன் ரவி.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
02-டிச-202016:26:30 IST Report Abuse
THINAKAREN KARAMANI நமது முதல்வர் இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நிச்சயமாக உடனடியாக செய்வார் என்று நம்புவோம். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X