சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: ‛சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு பைடன் நிர்வாகம் முழு ஆதரவை அளிக்கும்' என்று அமெரிக்க எம்.பியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. எல்லையில், ஆறு மாதங்களுக்கு மேலாக, இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.கட்டுமானப் பணிபல சுற்று பேச்சு நடத்தியும், படைகளை

வாஷிங்டன்: ‛சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு பைடன் நிர்வாகம் முழு ஆதரவை அளிக்கும்' என்று அமெரிக்க எம்.பியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.latest tamil news


இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. எல்லையில், ஆறு மாதங்களுக்கு மேலாக, இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.கட்டுமானப் பணிபல சுற்று பேச்சு நடத்தியும், படைகளை திரும்பப் பெறுவதில் என்ற உடன்பாடும் ஏற்படவில்லை.இந்நிலையில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், பல கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, சமீபத்தில் நடந்த தேர்தலில் மூன்றாவது முறையாக, பிரதிநிதிகள் சபைக்கு, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது:எல்லையில் சீனா பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, செயற்கைக்கோள் படங்கள் பல வெளியாகி உள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவை துாண்டிவிடும் நோக்கத்தில் சீனா செயல்படுவது உறுதியாகிறது.

தென் சீன கடல் பகுதிகளில், பல புதிய தீவுகளை சீனா உருவாக்கியுள்ளது. அந்த பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்த நிலைமையை சீனா மாற்றியுள்ளது.அது போன்ற முயற்சியைத்தான், இந்திய எல்லையிலும் சீனா மேற்கொண்டு வருகிறது.முழு ஆதரவுஇந்த விவகாரம் உட்பட, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எப்போதும் அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் போல், அதிபராக பதவியேற்க உள்ள, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன் நிர்வாகமும், இந்தியாவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்.


latest tamil news


அதனால்தான், ஜோ பைடன் நிர்வாகத்தில், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ள, ஆன்டனி பிளென்கினும், இந்தியாவின் நீண்டகால நண்பர். ஜோ பைடன், கமலா ஹாரிஸ், பிளென்கின் ஆகியோர் இந்தியா ஆதரவு கொள்கை உள்ளவர்கள். அதனால், சீனாவுக்கு எதிரான பிரச்னையில், இந்தியாவுக்கு முழு ஆதரவை, புதிய நிர்வாகம் அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANTONYRAJ - MADURAI,இந்தியா
30-நவ-202015:55:52 IST Report Abuse
ANTONYRAJ இதே பைடனும் கமலாவும்தான் காஷ்மீரில் 370 ஐ இந்தியா அமல் படுத்தியவுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தையா தக்கா என்று குதித்தவர்கள்.
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
30-நவ-202013:24:08 IST Report Abuse
Raghuraman Narayanan Because medicines may have to be manufactured in India to exporting to third world countries which will be very big task.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
30-நவ-202004:13:04 IST Report Abuse
blocked user ஜோ பைடனின் ஆட்சி டிரம்ப் செய்த காமடிகளை மிஞ்சப்போகிறது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-நவ-202015:59:30 IST Report Abuse
தமிழவேல் ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் முன் அரசிலிலேயே இருந்ததில்லை. ஆனால், பைடன் 45 வருடங்களாக அரசியலில் உள்ளவர். ஒபாமாவுடன் துணை அதிபராகவும் இருந்து அமெரிக்காவை நடத்தியவர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X