இந்திய நிகழ்வுகள்
1. ம.பி.,யில் 26 புலிகள் பலி
போபால்: இந்தியாவில், அதிக புலிகள் இருக்கும் மாநிலமாக விளங்கும், மத்திய பிரதேசத்தில், இந்த ஆண்டு, 26 புலிகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இங்கு, கடந்த ஆண்டு, 28 புலிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலளித்த, மாநில வனத் துறை அமைச்சர் விஜய் ஷா கூறுகையில், “மாநிலத்தில், சராசரி புலிகளின் இறப்பு விகிதத்தை விட, பிறப்பு விகிதம், கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்து காணப்படுகிறது,” என்றார்.
2. பாக்., 'ட்ரோன்' விரட்டியடிப்பு
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியை கடந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா விமானம், நேற்று முன்தினம் மாலை, இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இதைப் பார்த்ததும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, எல்லைப் பாதுகாப்புப் படையினர், அதை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இந்திய எல்லையில் இருந்து பாக்., எல்லைக்குள், அந்த ட்ரோன் விரட்டியடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.பாக்., ராணுவம் அத்துமீறல்ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், நேற்று முன்தினம் இரவு, அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஹிரனாகர் செக்டாரை குறிவைத்து நடத்தப்பட்ட அந்த தாக்குதலில், சிறிய பீரங்கிகளை, பாக்., ராணுவம் உபயோகித்தது. எனினும், இதற்கு, நம் பாதுகாப்புப் படையினர், தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையில் நடந்த அந்த சண்டை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை.
3. சத்தீஸ்கரில் கண்ணிவெடி தாக்குதல் அதிகாரி உயிரிழப்பு; 9 வீரர்கள் காயம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், ஒரு, 'கமாண்டோ' அதிகாரி உயிரிழந்தார். மேலும், ஒன்பது கமாண்டோக்கள் படுகாயமடைந்தனர்.

தமிழக நிகழ்வுகள்
1. அடுக்குமாடி குடியிருப்பில் பட்டாசு வெடித்து விபத்து
மதுரை ; மதுரை பைபாஸ் ரோடு கிரீன்லீவ்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் வசிப்பவர் விக்னேஸ்வரன்.
இவர் தனியார் நிறுவன மருத்துவ விற்பனையாளர். தீபாவளிக்காக வாங்கிய பட்டாசுகளில் மீதமுள்ளதை நேற்று கார்த்திகை தினத்தையொட்டி அவரது குழந்தைகள் நேற்று வெடித்தனர்.
இதில் ஏற்பட்ட தீப்பொறி அருகில் சானிடைசர் பெட்டியில் விழுந்து அதிக வெடி சத்தத்துடன் தீப்பற்றியது. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தால் அச்சமுற்ற குடியிருப்போர் வீடுகளிலிருந்து வெளியேறினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
2. வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்ற தம்பதி கைதுஈரோடு: ஈரோட்டில், மூன்று வங்கிகளில், போலி ஆவணங்கள் கொடுத்து, 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த தம்பதியை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
3. நாமக்கல்: நாமக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்த காதலி இறந்தார். காப்பாற்ற முயன்ற காதலன் படுகாயம் அடைந்தார்.
4. காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வடவாற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர், தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

உலக நிலவரம்
1. ஊரடங்கை கண்டித்து போராட்டம்; லண்டனில் 155 பேர் கைது
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஊரடங்கை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்ற, 155 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE