பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் துவங்கும்

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020
Share
Advertisement
சபரிமலை: ''சபரிமலையில், 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது, கூடுதல் பக்தர்களுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும்,'' என, தேவசம் போர்டு தலைவர் வாசு கூறினார்.சபரிமலையில், அவர் கூறியதாவது:சபரிமலையில், தற்போதய மண்டல காலத்தில் இதுவரை, 13 ஆயிரத்து, 529 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், அரசு

சபரிமலை: ''சபரிமலையில், 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது, கூடுதல் பக்தர்களுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும்,'' என, தேவசம் போர்டு தலைவர் வாசு கூறினார்.



latest tamil news


சபரிமலையில், அவர் கூறியதாவது:சபரிமலையில், தற்போதய மண்டல காலத்தில் இதுவரை, 13 ஆயிரத்து, 529 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், அரசு இறுதி முடிவு அறிவித்த உடன், முன்பதிவு துவங்கும். திங்கள் முதல், கூடுதல் பக்தர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.இக்கட்டான சூழ்நிலையில், இந்த மண்டல சீசன் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news


பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், சன்னிதானத்தில் கூட்டம் கூட அனுமதி இல்லை. நவம்பர், 27 வரை, 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தபால் பிரசாதத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுதல் முன்பதிவு எப்போது துவங்கும் என்ற விபரத்தை, தேவசம் போர்டுக்கு தர வேண்டும் என, கேரள போலீஸ் துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.வனத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்ததும், 'ரோப்வே' பணி துவங்கும். சபரிமலை நில அளவீடு செய்ய, 'ஜாயின்ட்' சர்வே நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X