பொது செய்தி

தமிழ்நாடு

‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு தமிழகம் நாளை வருகை

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை; 'நிவர்' புயல் பாதிப்புகளை பார்வையிட, ஏழு பேர் இடம் பெற்ற மத்திய குழு, நாளை (டிச.,1) தமிழகம் வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரிக்கும் இந்த குழு செல்ல உள்ளது.மாநிலங்களில் பேரிடர் ஏற்படும் போது, சேதங்களை மதிப்பிட, மத்திய அரசு குழுவை அனுப்பும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அந்த
nivar, cyclone, central team , examine, damage, நிவர், புயல், மத்தியக்குழு, வருகை, தமிழகம்

சென்னை; 'நிவர்' புயல் பாதிப்புகளை பார்வையிட, ஏழு பேர் இடம் பெற்ற மத்திய குழு, நாளை (டிச.,1) தமிழகம் வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரிக்கும் இந்த குழு செல்ல உள்ளது.

மாநிலங்களில் பேரிடர் ஏற்படும் போது, சேதங்களை மதிப்பிட, மத்திய அரசு குழுவை அனுப்பும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அந்த வகையில், கடந்த வாரம், 'நிவர்' புயல் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலமும் பாதிப்புக்குள்ளாகின.பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன; வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன; குடிசைகள் சேதமடைந்தன; மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன; கால்நடைகள் இறந்தன.

புயல் பாதிப்பு குறித்து, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம், தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும், தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், உறுதி அளித்தார்.குழுவில் யார் யார்? இந்நிலையில், 'நிவர்' புயல் பாதிப்புகளை பார்வையிட்டு, சேத விபரங்களை, மத்திய அரசுக்கு அறிக்கையாக அளிப்பதற்காக, மத்திய அரசு, ஏழு பேர் குழுவை, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்ப உள்ளது.


latest tamil news


குழுவில், மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலர், மத்திய நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலர், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலர். மேலும், மத்திய மின்துறை செயலர், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை, மீன்வளத் துறை, நீர்வளத்துறைகளின் செயலர்கள் என, ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர் நாளை முதல் ஆய்வு பணியை துவக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், புயல் பாதிப்புகளை பார்வையிட உள்ளனர். இக்குழுவினர் தமிழக முதல்வர் மற்றும் புதுச்சேரி முதல்வரையும், அதிகாரிகளையும் சந்தித்து பேச உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-நவ-202012:47:47 IST Report Abuse
Ramesh Sargam மத்திய குழு நாளை வருவதற்குப்பதில், மேலும் ஒரு வாரம் விட்டு வந்தால் நல்லது. ஏனென்றால் டிசம்பர் ஒன்று அல்லது இரண்டு தமிழகத்தை நோக்கி மேலும் ஒரு புயல் வருவதாக செய்தி. அந்த புயல் வந்துசென்றபிறகு, இந்த மத்திய குழு வந்தால், மொத்தமாக இரண்டு புயல்களால் ஏட்பட்ட அழிவுக்கும் ஒரு தொகையை நிவாரணமாக அளிக்கலாம்.
Rate this:
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202011:54:27 IST Report Abuse
Ramki ராகவன் அண்ணா, டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. தமிழகம் முழுதும் நடுநிலைப்பள்ளியிலிருந்து கல்லூரி மேற்படிப்பு வரை ஒவ்வொரு துறைக்கும் அல்லது பாடத்திற்கும் ஒட்டுமொத்தமாக சில ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் கொண்டு ஆன்லைன் பாடமெடுத்தால் போதும். அவர்கள ஊதியம்,பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், அவற்றின் நிர்வாக செலவு அனைத்தும் அரசிற்கு மிச்சம். மாணாக்க்கர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். சரிதானே? உங்கள் கருத்துக்கள் , பணியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியரிடமிருந்து வந்ததாக தோணவில்லை.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
30-நவ-202011:21:00 IST Report Abuse
Allah Daniel என்ன...எல்லாம் முடிஞ்ச அப்புறம்...உண்மையான அக்கறை இருந்தா புயல் அடிக்கும்போதே வந்திருக்கணும்...மோடி ஓயிக..மோடி ஓயிக...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X