கைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், புதிய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஏதும் அறிவிக்கவில்லை.இதையடுத்து, பல்வேறு மாகாணங்கள், தாங்களாகவே களத்தில் இறங்கியுள்ளன.அமெரிக்காவில் வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப்,

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், புதிய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஏதும் அறிவிக்கவில்லை.



latest tamil news


இதையடுத்து, பல்வேறு மாகாணங்கள், தாங்களாகவே களத்தில் இறங்கியுள்ளன.அமெரிக்காவில் வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப், மீட்பு நடவடிக்கைகளை மார்ச்சில் வெளியிட்டார்.அதன் பின், புதிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றார்.

மேலும், வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. 1.96 லட்சம் பேர்அமெரிக்காவில் நேற்று முன்தினம் மட்டும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இது புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன், நவ., 20ல் 1.96 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.ஜோ பைடன் தலைமையிலான, புதிய நிர்வாகம், அடுத்தாண்டு, ஜன., 20ல் தான் பதவியேற்க உள்ளது. அதுவரை, அரசிடம் இருந்து எந்த அறி விப்பும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, பல்வேறு மாகாணங்கள், தாங்களாகவே, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக, பல்வேறு மாகாணங்களில் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு தரப்பு மக்களுக்கு சலுகைகள், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.பொருளாதார மீட்புமேலும் சில மாகாணங்களில், வரும் நாட்களில் இதுபோன்ற கூட்டம் நடக்க உள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களின் கவர்னர்கள், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் உள்ள மாகாணங்களில், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி, குடியரசு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கொலராடோ, நியூ மெக்சிகோ உள்ளிட்ட மாகாணங்களின் கவர்னர்கள், சிறப்பு கூட்டத்தை நடத்தி, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர்.நியூஜெர்சி, வாஷிங்டன் மாகாணங்களில், சட்டசபை கூட்டங்களை உடனடியாக கூட்ட, குடியரசு கட்சி வலியுறுத்தி வருகிறது.'மாகாணங்களின் நிதியை மட்டும் வைத்து, மீட்பு நடவடிக்கைகளை எடுக்க முடியாது. அதிபர் நிர்வாகம் எங்களை கைவிட்டுவிட்டது. 'வைரஸ் பிரச்னையை, அந்தந்த மாகாணங்களே கவனித்து கொள்ள வேண்டும் என, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்; இது பொறுப்பற்ற செயல்' என, பெரும்பாலான மாகாண கவர்னர்கள் கூறியுள்ளனர்.


latest tamil news


முக கவசம் அணியாதவர் கைதுசால்ட் லேக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து, சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த ஒருவர், முக கவசம் அணியாமல் இருந்தார்.முக கவசம் அணியும்படி, விமான நிலைய ஊழியர்கள் கூறினர். ஆனால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விமானத்துக்குள் அவர் நுழைந்தார். விமான ஊழியர்களும், அவரை முக கவசம் அணியும்படி கூறினார். அவர் மறுத்தார். இதையடுத்து, விமானத்தில் இருந்த மற்ற பயணியர், கீழே இறங்க முயன்றனர். இந்நிலையில், அங்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால், விமானம், 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202016:09:12 IST Report Abuse
Kalyan Singapore இருக்கும் மீதமுள்ள நேரத்தில் பிடனுக்கு எவ்வளவு தலைவலி தர முடியுமோ அதை தந்துவிட்டே டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவார் அவருக்கு அளித்த நாலு வருடத்தில் விசாரணை மேல் விசாரணை போட்டு துன்புறுத்தியவர்கள் அல்லவா ?
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
30-நவ-202015:57:58 IST Report Abuse
Raj சீக்கிரம் வீட்டிற்கு போகட்டும்
Rate this:
Cancel
vidhuran - chennai,இந்தியா
30-நவ-202014:55:06 IST Report Abuse
vidhuran பிடன், "ஏன் வெற்றி பெற்றோம்?" என்று நினைக்கும் அளவிற்கு டிரம்ப் ஒருமாதமாக நடந்து கொள்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X