பாக்., உடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது?: பா.ஜ.,விற்கு மெஹபூபா கேள்வி

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (91)
Share
Advertisement
ஸ்ரீநகர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் எனக்கூறிய பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? என கேள்வியெழுப்பியுள்ளார்.பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு தேர்தல் தீர்வல்ல. இருநாடுகளுக்கிடையே
BJP, Pakistan, MehboobaMufti, பாஜக, மெஹபூபா முப்தி, காஷ்மீர், காஷ்மீர், பேச்சுவார்த்தை

ஸ்ரீநகர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் எனக்கூறிய பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு தேர்தல் தீர்வல்ல. இருநாடுகளுக்கிடையே (இந்தியா-பாகிஸ்தான்) பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். நமது நிலத்தை ஆக்கிரமித்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? அது முஸ்லிம் நாடாக இருப்பதால்தான் தற்போது எல்லாமே வகுப்புவாதமாக இருக்கிறதா?. இங்கு ஏறத்தாழ இந்தியாவின் 9 லட்சம் பாதுகாப்புப் படைகள் உள்ளன. வேறு எந்த மாநிலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இத்தனைப் படைகள் உள்ளன?


latest tamil newsசட்டப்பிரிவு 370 அனைத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டது என்றால் இன்னும் எதற்கு இங்கு ராணுவம் குவிந்துள்ளது? அவர்கள் எல்லைக்குச் சென்றிருக்க வேண்டும். தேர்தலில் பங்கெடுப்பது காஷ்மீர் பிரச்னையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்தப் பிரச்னை இருந்துகொண்டேதான் இருக்கும். எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைக்கப்பட்டுள்ளார்கள். அதேசமயம், பா.ஜ., வேட்பாளர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

சட்டப்பிரிவு 370 குறித்து பேசக் கூடாது என எங்களிடம் கூறுகின்றனர். பா.ஜ., அமைச்சர்கள் காஷ்மீருக்கு வருகின்றபோது, 10-ல் 9 முறை சட்டப்பிரிவு 370 குறித்து அவர்கள் பேசுகின்றனர். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுவிட்டது, அது திரும்ப கொண்டுவரப்படாது என்பதில் பா.ஜ., உறுதியாக இருந்தால், பிறகு ஏன் அதைப் பற்றி நான் பேசும்போது அவர்களுக்கு சலசலப்பு ஏற்படுகிறது. இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
யார் பேச முற்பட்டாலும், அவர்கள் மீது தடுப்புச் சட்டம் பாய்கிறது. நான் காவலில் வைக்கப்பட்ட பிறகு, தேர்தல் அதிகாரிகளும், மற்ற அதிகாரிகளும் நான் காவலில் வைக்கப்படவில்லை என்று கூறியது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
01-டிச-202008:58:52 IST Report Abuse
madhavan rajan காஷ்மீர் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியா காஷ்மீர் இந்துக்களை வெளியேற்றும் நடவடிக்கையை காங்கிரஸ் அரசு எடுத்தது. உங்களை போன்ற தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் காஷ்மீரில் இந்துக்களுக்கு நல்ல வாழ்க்கையோ, பாக்கின் தீவிரவாதிகள் செயல்பாடு குறைந்வோ, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு சமமான மாநிலமாகவோ மாற்றப்பட்டிருக்க வாய்ப்பு உண்டா? அதுபோலத்தான் இருக்கும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாக்குடன் இந்தியாவின் பேச்சு வார்த்தை.
Rate this:
Cancel
Tamilan - Tuticorin,பஹ்ரைன்
01-டிச-202000:16:02 IST Report Abuse
Tamilan என் தாய் நாட்டுக்காக உழைத்து என் தாய் நாட்டை எல்லா விதத்திலும் முன்னேற்ற துடிக்கும் பிஜேபி கு தான் என்னுடைய வோட் நான் மட்டும் இல்லாமல் என் வீட்டில் இருக்கும் அனைவரைம் பிஜேபி கு தான் வோட் போட செய்வேன்.
Rate this:
Cancel
J Pill - Dirty piggs,பாகிஸ்தான்
01-டிச-202000:09:06 IST Report Abuse
J Pill Sister is a Turkscancer tumor, so to be removed to protect the nation and humanity in this world. Not to waste time after talking where is nothing, or front of a cobra.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X