பொது செய்தி

இந்தியா

"வாரிசு அரசியல் பற்றி இப்படி ரத்தின சுருக்கமாக யாராலும் விளக்கம் தர முடியாது...

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
வாரிசுகள் அரசியலில் இருப்பது, வாரிசு அரசியல்இல்லை. ஆனால், வாரிசுகள் கட்சியையே வளைக்க பார்ப்பது தான், வாரிசு அரசியல். பா.ஜ.,வில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம். தி.மு.க.,வில் கருணாநிதி, அவருக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதி, இன்பநிதி மட்டுமே தலைவராக முடியும். பா.ஜ.,வில், 10 ஆண்டுகளுக்கு பின் யார் தலைவர் ஆவர் என தற்போது கூற முடியாது. ஆனால் தி.மு.க.,வில் இன்பநிதி தலைவராவார்
"வாரிசு அரசியல் பற்றி இப்படி ரத்தின சுருக்கமாக யாராலும் விளக்கம் தர முடியாது...

வாரிசுகள் அரசியலில் இருப்பது, வாரிசு அரசியல்இல்லை. ஆனால், வாரிசுகள் கட்சியையே வளைக்க பார்ப்பது தான், வாரிசு அரசியல். பா.ஜ.,வில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம். தி.மு.க.,வில் கருணாநிதி, அவருக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதி, இன்பநிதி மட்டுமே தலைவராக முடியும். பா.ஜ.,வில், 10 ஆண்டுகளுக்கு பின் யார் தலைவர் ஆவர் என தற்போது கூற முடியாது. ஆனால் தி.மு.க.,வில் இன்பநிதி தலைவராவார் என கூறி விடலாம். இதுதான் வாரிசு அரசியல்.
- வருமான வரி முன்னாள் அதிகாரி சரவணகுமார்


'வாரிசு அரசியல் பற்றி, இப்படி ரத்தின சுருக்கமாக யாராலும் விளக்கம் தர முடியாது' என பாராட்ட தோன்றும் வகையில், பா.ஜ.,வில் உள்ள, வருமான வரி முன்னாள் அதிகாரி சரவணகுமார் பேட்டி.



இங்கு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எந்தப் புயலுக்கும் வெளியே செல்லாத முதல்வர், தேர்தல் நேரம் என்பதால், இப்போது கடலுாருக்கு சென்றிருக்கிறார்.
- தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்


'நிவர்' புயலை சாமர்த்தியமாக எதிர்கொண்டு, முதல்வர் சமாளித்து விட்டாரே என்ற பொறாமை, உங்கள் பேச்சில் வெளிப்படுகிறதே' என சொல்ல தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனின்,'பொருமல்' பேட்டி.



சென்னை, அடையாற்றில் வெள்ளம் சூழ்ந்து விடாமல் இருக்க, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, சிறிது சிறிதாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அ.தி.மு.க., மக்களை பாதுகாக்கும் அரசாக உள்ளது. முதல்வர், கொட்டும் மழையிலும், செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டார்.
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


latest tamil news




'கடந்த, 2015ல் இதேபோன்ற நடவடிக்கையை, எங்க தலைவி ஜெயலலிதா எடுத்திருந்தால், சென்னை பெருவெள்ளத்தில் இருந்து தப்பியிருக்கும்' என, ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.



அரசு எடுத்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பெரும் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றி உள்ளது. அடுத்து, ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
- அமைச்சர் உதயகுமார்


'அடுத்து ஒரு புயல் வராதா; நம் திறமையை இன்னும், 'பளிச்'சென்று காட்ட...' என்ற ஏக்கத்தில் இருப்பவர் போல, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி.



'நிவர்' புயல் பாதிப்புகள் குறித்து, கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்படும்.
- அமைச்சர் வீரமணி


'தேர்தல் வருது... நிவாரணத்துல எந்த குறையும் வைக்க மாட்டோம்... சொன்னதை விட கூடுதலாகவே செய்வோம்' என, மக்களுக்கு சூசகமாக உணர்த்தும் வகையில், தமிழக வணிக வரித் துறை அமைச்சர் வீரமணி பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-நவ-202021:03:53 IST Report Abuse
Matt P எபடியோ இன்பநிதி பெயரை அவங்க குடும்பத்தில் இருக்கிறார் என்பதை உலகத்துக்கு தெரிவிச்சாச்சு. பொதுவாக ராஜ குடும்பத்தில் பிறந்த வில்லியமும் ஹாரியும் தான் சின்ன வயதில் உலகத்தில் தெரிந்தார்கள். ...தேர்தல் வந்தபிறகு தான் உங்க தலைவர் சுடலை அவுட்டோ ஓட்டினார். வயலில் இறங்கினார். தேர்தல் நெருங்கும்போது முதல்வர் புயலை சநதிக்க சென்றாராம்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
30-நவ-202018:59:31 IST Report Abuse
Murthy பிஜேபி கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் வாரிசு அரசியல் இல்லாமலா இருக்கு. அடுத்தவன் முதுகுதான் தெரியுதோ?
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
30-நவ-202018:56:21 IST Report Abuse
Murthy , அதை கூறினீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X