பொது செய்தி

தமிழ்நாடு

"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்" - ரஜினி

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (74+ 31)
Share
Advertisement
சென்னை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினி, ‛அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் விரைந்து முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,' என தெரிவித்ததார்.அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று (நவ.,30) சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினி, ‛அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் விரைந்து முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,' என தெரிவித்ததார்.



latest tamil news


ரசிகர்களை சந்தித்தபின் ரஜினி பேட்டி


அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று (நவ.,30) சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில், சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி, ‛என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும். பலமுறை எச்சரித்தும், சிலர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை,' என்றார்.


latest tamil news



மேலும், ‛தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா? தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா? மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர்? கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்? கொரோனா பரவலுக்கு இடையே பரப்புரை செய்வது எப்படி? போன்ற கேள்விகளை நிர்வாகிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


இதற்கு நிர்வாகிகள் ஒவ்வொருவராக அரசியல் குறித்து கருத்துகளை கூறிவந்தனர். தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மேலும், ரஜினி உடனடியாக கட்சியை தொடங்க வேண்டும் என மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக ரஜினியே இருக்க வேண்டும் எனவும் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு ரஜினி, ‛இன்னும் அதிகமாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் ஜனவரியில் ரஜினி கட்சியை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


latest tamil news




ரஜினி அளித்த பேட்டி விவரம்


ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது:
மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பில் அவர்களுடைய கருத்துகளை கூறினார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்துக்கொண்டேன். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் கூட இருக்கிறோம் என நிர்வாகிகள் உறுதியளித்தனர். நான் என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (74+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - tokyo,ஜப்பான்
04-டிச-202017:47:00 IST Report Abuse
Murugan useless guy
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
30-நவ-202023:15:43 IST Report Abuse
raghavan முடிந்தும் முடியாத தொடர் கதை.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
30-நவ-202021:31:12 IST Report Abuse
SaiBaba ஊரே இங்கதான் இருக்காப்புல இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X