ரூ.200 கடன் தர மறுத்தவரை சுட்டு கொன்ற கொடூரன்; இன்றைய 'கிரைம் ரவுண்ட்அப்'

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
01. கேரளா: கொச்சியில் மரத்தின் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி. 25 பேர் காயம்.02. உ.பி.,மாநிலம் அலிகாரில் டயர் ரிப்பேர் பார்க்கும் நிறுவனம் நடத்தி வருபவர் அன்சார் அகமது. இவரிடம் ஆசிப் என்பவர் தனது பழைய மோட்டார் சைக்கிளை அடமானமாக வைத்து ரூ.200 கடன் கேட்டார். ஆனால் அன்சார் மறுக்கவே ஆசீப் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றார். குற்றவாளி ஒரு போதை அடிமை

01. கேரளா: கொச்சியில் மரத்தின் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி. 25 பேர் காயம்.



latest tamil news



02. உ.பி.,மாநிலம் அலிகாரில் டயர் ரிப்பேர் பார்க்கும் நிறுவனம் நடத்தி வருபவர் அன்சார் அகமது. இவரிடம் ஆசிப் என்பவர் தனது பழைய மோட்டார் சைக்கிளை அடமானமாக வைத்து ரூ.200 கடன் கேட்டார். ஆனால் அன்சார் மறுக்கவே ஆசீப் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றார். குற்றவாளி ஒரு போதை அடிமை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

03. மத்திய பிரசேதம் குணாவில் தீப்பெட்டி தர மறுத்ததால் ஆத்திரத்தில் 50 வயது தோட்ட தொழிலாளி கொலை.


மனிதனை காப்பாற்றிய தெரு நாய்


04. கேரள மாநிலம் ஆலப்புழா களவூர் அருகே பைக்கில் வந்தவர் குளத்தில் விழுந்தார். இரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. ஆனால் இந்த விபத்தை பார்த்த தெரு நாய் ஒன்று தொடர்ந்து அந்த குளத்தின் அருகே குரைத்து கொண்டே இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் வந்து காயமுற்ற நபரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நாய் பெயர் குட்டன். பலரும் நாயை வெகுவாக மெச்சினர்.


latest tamil news



05. உ .பி., மாநிலம் கான்பூரில் சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்தின் நிகழ்வு


01. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் கடன்தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்தனர்.

02. கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அம்மாசை,45. என்பவரை 2013 ல் கொலை செய்த வழக்கில் கோவை செசன்ஸ் கோர்ட்டில் வக்கீல் ராஜவேலு, மோகனா, பொன்ராஜ் ஆகிய 3 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர். 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


latest tamil news



03. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார் .

04. நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் இளையராஜா என்பவரை கத்தியால் குத்திய சங்கர் கைது செய்யப்பட்டார்.


உலக நடப்பு



01. நைஜீரியாவில் விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்துள்ளனர்.

02. பேஸ்புக் நண்பரான 20 வயது வாலிபரை தேடி நேபாளத்தில் இருந்து மத்திய பிரதேசம் வந்த 16 வயது மாணவியை வாலிபரின் உறவினர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர் .
03. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மூத்த அணு ஆயுத விஞ்ஞானி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

04. ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

05. பிரிட்டனில் கடந்த 2012ல் தனது 6 குழந்தைகளை எரித்து கொன்ற வழக்கில் தாயார் பில்போட்டுக்கு 17 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் 7 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு அந்நாட்டு மக்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை எரித்தால் பெரிய வீடு அரசு தரும் என இந்த குற்றத்தை அவர் செய்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X