விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள்: மோடி

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாரணாசி: விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன் நன்மைகளை வரும் நாட்களில் காணலாம் என்றும் பிரதமர் மோடி பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி, இன்று (நவ.,30) தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ஹாண்டியா - ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை திறந்து வைத்து மோடி
FarmLaws, PMModi, Varanasi, வேளாண் சட்டம், விவசாயிகள், நலன், பிரதமர், மோடி

வாரணாசி: விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன் நன்மைகளை வரும் நாட்களில் காணலாம் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (நவ.,30) தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ஹாண்டியா - ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை திறந்து வைத்து மோடி பேசியதாவது: வாரணாசியில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து செயல்படுத்தாத, புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள். போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news


யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வராக ஆனதிலிருந்து, உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது. மாநிலத்தில் 12 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வாரணாசியில் சரக்கு மையத்தை நிறுவுவதன் மூலம், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாக சேமித்து விற்க வசதி கிடைத்துள்ளது.


latest tamil news


இந்த சேமிப்பு திறன் காரணமாக, முதல்முறையாக, இங்குள்ள விவசாயிகளின் விளைபொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன. விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன, இது அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். ஒரு விவசாயி தனது விளைபொருட்களை சிறந்த விலையையும் வசதிகளையும் கொடுப்பவர்களுக்கு நேரடியாக விற்க சுதந்திரம் பெற வேண்டாமா?


latest tamil news


சுவாமிநாதன் கமிஷனின் படி விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான எம்.எஸ்.பி வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்குறுதி காகிதத்தில் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. முன்பெல்லாம் அரசின் முடிவுகள் எதிர்க்கப்பட்டன. ஆனால் இப்போது வதந்திகள் எதிர்ப்பிற்கு அடிப்படையாகிவிட்டன. விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களின் நன்மைகளை நாம் வரும் நாட்களில் காண்போம், அனுபவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
01-டிச-202008:24:16 IST Report Abuse
amuthan ஆமாம். ஏழை விவசாயிகள் அம்பானி அதானிக்கு கண்டிப்பாக பயன் தரும் சட்டம்
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
01-டிச-202005:06:41 IST Report Abuse
Nepolian S ஆமா .. இப்படிதான் பணமதிப்பிழப்பு ஜி எஸ் டி எல்லாத்துக்கும் வரும் ஆண்டுகளில் இதன் பலனை அடைவோம் என்றீர்கள் இப்போது 10 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதை பேசவும்...
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
01-டிச-202005:01:30 IST Report Abuse
Nepolian S தலைப்பு உண்மையென்றால் ஏன் இவ்வளவு விவசாயிகள் டில்லியில் கூடியுள்ளனர் அத்தனை ஆயிரம் பேரில் ஒருவர் கூடவா படித்த விபரமானவர் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X