சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (நவ.,30) 1,456 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.59 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 220 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-153) மூலமாக, இன்று மட்டும் 62,616 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 001 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 872 பேர் ஆண்கள், 538 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,72,430 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,09,451 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 1,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 206 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 9 பேர் உயிரிழந்தனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,712 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE