சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை

Updated : நவ 30, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
மதுரை :கணவர் இறந்த சோகத்தில் மனைவி, மகள்கள் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண், 42; மனைவி வளர்மதி, 38, மகள்கள் அகிலா, 20, ப்ரீத்தி, 17. காதல் திருமணம் செய்த தம்பதி, சில ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் வசித்தனர். இந்நிலையில், அருணுக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டது. 'இன்னும் சில மாதங்கள் தான் ஆயுள்' என டாக்டர்கள் கூற,
 மதுரை, காதல் கணவர், இறந்த, சோகம்,2 மகள், மனைவி, தற்கொலை

 2 மகளுடன் மனைவி தற்கொலை

மதுரை :கணவர் இறந்த சோகத்தில் மனைவி, மகள்கள் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண், 42; மனைவி வளர்மதி, 38, மகள்கள் அகிலா, 20, ப்ரீத்தி, 17. காதல் திருமணம் செய்த தம்பதி, சில ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் வசித்தனர்.

இந்நிலையில், அருணுக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டது. 'இன்னும் சில மாதங்கள் தான் ஆயுள்' என டாக்டர்கள் கூற, விரக்தியின் உச்சிக்கே சென்ற அருண் குடும்பத்தினர், துாக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.


latest tamil news




அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், வளர்மதியின் சகோதரி சரஸ்வதி குடும்பத்தினர், தாங்கள் வசிக்கும் மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தில், அருண் குடும்பத்தினரை மீண்டும் வசிக்க செய்தனர். கல்லுாரியில், அகிலா பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு, ப்ரீத்தி பிளஸ் 2 படித்து வந்தனர். இந்நிலையில், ஜூலை, 27ல் அருண் இறந்தார்.
இதனால், வளர்மதியும், மகள்களும் மன அழுத்தத்திற்கு ஆளாயினர்.இதனால், தன் வீட்டின் ஒரு பகுதியிலேயே அவர்கள் தங்க, சரஸ்வதி ஏற்பாடு செய்தார்.இன்று காலை, 7:00 மணிக்கு சரஸ்வதி, தண்ணீர் பிடிக்க வளர்மதி குடும்பத்தினரை எழுப்ப வந்தபோது, மாடி அறையில், மூவரும் ஒரே கொக்கியில் தனித்தனி சேலையில், துாக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரிந்தது.

அவர்கள் ஆசையாய் வளர்த்த நாய் குட்டியும் இறந்து கிடந்தது.அதற்கும் விஷம் கொடுத்துள்ளனர். முன்னதாக, மூவரும் கை மணிக்கட்டில், நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.


கடிதத்தில் உருக்கம்



மூவரும், ஒரே தாளில் கடிதம் எழுதி வைத்துள்ளனர். மகள்கள் எழுதியதில், 'எங்களுக்கு எங்கப்பாவை விட்டுட்டு இருக்க முடியல. சோ... அவர்கிட்டயே போறோம். ஒத்தக்கடையில் உள்ள இடத்தை விற்று பாட்டியிடம் ஒப்படைக்கவும்' என கூறப்பட்டுள்ளது.

மனைவி எழுதிய கடிதத்தில், 'என் கணவர் அருண் சம்பாதித்த சொத்துகளை உரிமை கொண்டாட, அவரது குடும்பத்தினருக்கு உரிமையில்லை. 'அவரது குடும்பத்தினர் யாரும், எங்களுக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூடாது. நகை, பணத்தை என் அப்பாவிடம் ஒப்படைக்கவும். என் பெயரில் உள்ள சொத்துகளை என் தாய்க்கு பத்திரம் எழுதி தரவும்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
01-டிச-202012:37:35 IST Report Abuse
Marai Nayagan இப்போது எங்கும் இளவயது மரணங்கள்
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
01-டிச-202012:30:47 IST Report Abuse
ANTONYRAJ இது கோழைத் தனமான முடிவு என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் இறக்கும் தருவாயில் அந்த தாயின் மனது என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
01-டிச-202012:30:02 IST Report Abuse
Marai Nayagan இதுபோன்ற சமூக அவலங்களை இன்னொரு நிகழ்வாக கடந்து செல்லாமல் இதன் முல காரணத்தை மக்கள் சீந்திக்கவேண்டும். சினிமாவின் காதல் என ஏற்படுத்திய சீரழிவு மற்றும் கூட்டு குடும்பத்தை உடைத்து உறவினர்களை வெறுத்து ஒதுக்கியதால் வந்த விளைவு. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்பது ஆன்றோர் வாக்கு. டாஸ்மாக் த்ரிராவிட தமிழனுக்கு இதெல்லாம் சிந்திக்க முடியாத நிலை. போலி நாத்திக திராவிட அரசியலை ஒழித்து நமது தொன்மையான கலாச்சாரத்தை குடும்ப சமூக அமைப்பை சீர் செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X