சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா!

Added : நவ 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா!இலா.பிச்சுமணி ஐயர், தென்காசியிலிருந்து எழுதுகிறார்: நடக்கற சம்பவத்தை எல்லாம் பார்க்கறச்சே, ரொம்ப வேதனையா இருக்கு. சமீபத்துல, தி.மு.க., இளைஞரணிச் செயலர், அதான், ஸ்டாலின் மகன் உதயநிதி, தேர்தல் பிரசார கூட்டத்துல கலந்துக்குறதுக்காக, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை போயிருக்கார்... வழியில, அவா கட்சிக்காரா, திருச்சி அருள்மிகு கரியமாணிக்கம்

இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா!

இலா.பிச்சுமணி ஐயர், தென்காசியிலிருந்து எழுதுகிறார்: நடக்கற சம்பவத்தை எல்லாம் பார்க்கறச்சே, ரொம்ப வேதனையா இருக்கு. சமீபத்துல, தி.மு.க., இளைஞரணிச் செயலர், அதான், ஸ்டாலின் மகன் உதயநிதி, தேர்தல் பிரசார கூட்டத்துல கலந்துக்குறதுக்காக, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை போயிருக்கார்... வழியில, அவா கட்சிக்காரா, திருச்சி அருள்மிகு கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில்லேயிருந்து, உதயநிதிக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கா. அதுக்காக, பூரண கும்பம், பரிவட்டத்தோட, சிவாச்சாரியார் எல்லாம் ரோட்ல காத்துண்டு இருந்திருக்கா. ஆனா, பூரண கும்ப மரியாதையை, உதயநிதி ஏத்துக்காம புறக்கணிச்சுட்டதா, செய்தி பார்த்தேன். இது, நம்மளோட மரியாதையை, நாமளே குறைச்சுக்குற மாதிரி இல்லையா!குருக்கள் அண்ணா... நாம, பல காலமா, அரசியல்வாதிகள் வரும்போது, வாசலில் தட்டு வச்சுண்டு நிற்கறது வழக்கமா இருக்கு. சுவாமிக்கு செய்யறதுக்குத்தான் நம்மளை எல்லாம் படைச்சுருக்கா. நாம கஷ்டப்பட்டு வேதம் படிச்சுட்டு, சுத்தபத்தமா இருக்கறதுனால தான், சுவாமிய தொட்டு கைங்கர்யம் பண்றதுக்கு, நமக்கு உரிமை குடுத்திருக்கா.எல்லா ஜாதிக்காராளும் இதுக்கு வரலாம், தப்பில்லே; அவாளும் வேதம் படிச்சுட்டு சுத்தமா இருந்தா, வரலாம்னு சட்டமே சொல்றது. ஆனாலும், காலங்காலமா நாம தான் பண்ணிண்டு இருக்கோம்; மத்த பிராமணாள் கூட, உள்ளே வர முடியாது. நமக்கு மட்டும் தான் சுவாமியைத் தொட்டு அபிஷேகம் செய்யறதுக்கும், ஆரத்தி எடுக்கறத்துக்கும், அலங்காரம் பண்றதுக்கும் உரிமை இருக்கு. அந்தளவுக்கு பய பக்தியோட இருக்கற நாம, அரசியல்வாதிகளுக்காக ரோட்ல தட்டேந்தி நின்னு, அவா போடற, 500 ரூவாவுக்காக அவமானப்படக் கூடாது பார்த்துக்கோங்கோ!மனுஷாளுக்கு, குறிப்பா, கட்சிக்காராளுக்கு மரியாத தரணும்னு, யார் வந்து கேட்டாலும், 'நாங்க குருக்கள், வரக்கூடாது. கோவில் கதவைத் தாண்டி வெளில வரக் கூடாது'ன்னு சொல்ற தைரியத்தை, முதல்ல வளர்த்துக்கோங்கோ!அவாளால உங்களை என்ன பண்ணிட முடியும்? திட்டக் கூட முடியாது! கவர்மென்ட் சம்பளமா நமக்கு கெடைக்கறது; அது போறும். அதனால, 'கோவிலை விட்டு வெளில வந்து, ரோட்ல நிக்க முடியாது'ன்னு தைரியமா சொல்லிடுங்கோ!முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்போ இல்லை. அவாளை பத்தி பேசப்படாது. இருந்தாலும் அவா, காரை விட்டு இறங்காம, கதவு கிளாசை மட்டும் இறக்கி, தட்டுல, 500 ரூவா போட்டுட்டு, ஸ்வாமியை வேண்டிட்டு அப்படியே போயிடுவா... அந்த, 500 ரூவாவுக்காக நாம, நாலு மணி நேரமா காத்திருக்கணும். அது, அந்தக் காலத்தோட போனதோட போகட்டும். இனி வருங்காலத்துல, அப்படி செய்யாதீங்கோ! யார் கூப்பிட்டாலும், எத்தனை லட்சம் ரூவா கொடுத்தாலும் போகாதீங்கோ!திருமண மண்டபத்திற்கு, மணமக்களை ஆசீர்வாதம் செய்யப் போறேள்; நல்ல விசேஷத்துக்கு போங்கோ! 'கோவில்லேர்ந்து வரேன்'னு சொல்லிண்டு போகவே போகாதேங்கோ!
அதே மாதிரி, தனிப்பட்ட முறையில, நாலு மணி நேரம் காத்திருந்து தட்டேந்தற வேலைகளையெல்லாம், இப்பவே விட்டுருங்கோ. 'சுவாமிக்கு சேவை செய்யத் தான் நாங்க எல்லாம் இருக்கோம். ஆசாமிக்கு செய்ய மாட்டேன்'னு உறுதியா சொல்லிடுங்கோ...!

வேடிக்கை பேச்சில் இதுவும் ஒன்று!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பறவை, விலங்கு ஆகியவற்றைப் பிடிப்பதற்கு, பல வழிமுறை உள்ளன. ஆனால் மனிதனை, முகஸ்துதி செய்து, சுலபமாக பிடித்து விடலாம்.புகழ்ச்சிக்கு அடிமையாகாத மனிதன், எவனுமே இல்லை. புகழ்ச்சியில், இரு வகை உண்டு. ஒன்று, உண்மையிலேயே ஒருவரிடம் உள்ள நல்ல குணத்தை பாராட்டுவது. மற்றது, வஞ்சப் புகழ்ச்சி; இது ஒருவகை நையாண்டி.இலக்கணத்தில், வஞ்சப் புகழ்ச்சிக்கு என்றே, ஓர் அணி உள்ளது. நமக்கு கிடைக்கும் புகழுரையை எல்லாம், உண்மை என, நம்பி விடக் கூடாது. அந்த புகழ்ச்சிக்கு, நமக்கு தகுதியுள்ளதா என, சந்தேகிக்க வேண்டும். இந்த வஞ்ச புகழ்ச்சியை, நம் நாட்டு, மக்கு அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதே இல்லை.'எங்கள் தலைவர் கருணாநிதியை விட, எட்டு மடங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சிறந்த தலைவராக, ஸ்டாலின் விளங்குகிறார்' என, சமீபத்தில் கூறியிருப்பது, யாரோ ஒரு, தி.மு.க., தொண்டர் அல்ல; அக்கட்சியின் பொதுச் செயலர், துரைமுருகன்.அண்ணாதுரைக்கு பின், எத்தனை தலைவர்கள், தி.மு.க.,வில் இருக்க, 'பலே' திட்டம் தீட்டி, அதை செயல்படுத்தி, கட்சியையும், ஆட்சியையும் பிடித்தவர், கருணாநிதி.டிக்கெட் எடுக்க கூட பணம் இல்லாமல், ரயிலில் ஏறி, சென்னை வந்த கருணாநிதி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின், உலக பணக்காரர்களில் ஒருவராக மாறினார்.

தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுத்த கருணாநிதியோடு, பல்லாண்டு காலம் அரசியலிலும், ஆட்சியிலும் பங்கேற்ற துரைமுருகன் தான், இன்று இப்படி ஒரு வேடிக்கையான கருத்தைக் கூறியுள்ளார்.அவர் மனசாட்சிக்கே தெரியும்... இது, வஞ்சப் புகழ்ச்சி தான் என்பது!மேடை பேச்சும், எழுத்து வீச்சும், நையாண்டி பதில் சொல்லும் கலையும் பெற்ற கருணாநிதி எங்கே... பத்து வார்த்தைக்கு ஒரு முறை, துண்டு சீட்டு பார்த்தும் தவறாக பேசும்,ஸ்டாலின் எங்கே?நடக்க இயலாத நிலையிலும், சக்கர நாற்காலியில், டில்லி வரை சென்று, காரியம் சாதித்த கருணாநிதியோடு, இருசக்கர வாகனத்தில், அரசியல் பயணம் செய்து, 'பிலிம்' காட்டும், ஸ்டாலினை ஒப்பிடுவதே தவறு.சாதாரண ஆஸ்திக்கே, குடும்பத் தகராறு வரும்போது, சத்தமே இல்லாமல் ஆட்சியையும், கட்சியையும் கூறு போட்டு, தன் வாரிசுகளுக்கு வழங்கியவர், கருணாநிதி. ஆனால் ஸ்டாலினோ, அரசியலுக்காக அண்ணன், தங்கை உறவையே பலி கொடுக்கிறார்.துரைமுருகனுக்கு, இதெல்லாம் நன்கு தெரியும். இருந்தும் இப்படி கூறியுள்ளார் என்றால், இது வஞ்சப் புகழ்ச்சியே தான்.துரைமுருகனின் வேடிக்கை பேச்சை, நாம் பல முறை கேட்டிருக்கிறோம். அதில் இதுவும் ஒன்று... அவ்வளவு தான்!Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X