கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளில் மருந்து நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம், பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ஆஸ்ட்ரா செனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட சோதனை முடித்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பின் சோதனைக்கு மேற்கண்ட நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இந்த சோதனையில் இந்த தடுப்பு மருந்துகள் வெற்றிபெற்றால் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதனால் இந்த தடுப்பு மருந்து நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்ய தனியார் நிறுவனங்கள் அதீத போட்டியில் ஈடுபடலாம் என விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறி இருந்தனர்.
போலி தடுப்பு மருந்துகள் பலவற்றை விற்க சில நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ளும். இவரிடமிருந்து உலக நாடுகள் கவனமாக தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத தடுப்பு மருந்துகளை எந்த அமெரிக்க மாகாண அரசும் ஏற்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. தடுப்பு மருந்து விற்பனை மருந்து நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடிய விஷயம்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிக லாபத்தை தடுப்பு மருந்து விற்பனை மூலமாகவே இந்த நிறுவனங்கள் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மூன்றாம் கட்ட சோதனையை நிறைவு செய்யாத தடுப்பு மருந்துகள் பல மறைமுகமாக விற்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுவரை எந்த தடுப்பு மருந்தும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. ரெம்டெசிவிர் தவிர எந்தவித வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அரைகுறையாக உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தை உடலில் செலுத்துவதால் வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக வயோதிகர்களுக்கு இது உயிருக்கு ஆபத்தாக அமையும் வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை அமெரிக்கா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE