பொது செய்தி

தமிழ்நாடு

'தவறு செய்யும் ஊழியரை காப்பாற்றும் தொழிற்சங்கம்'

Added : நவ 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை : 'தவறு செய்யும் ஊழியர்களை காப்பாற்றும் நோக்கில், தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதிருப்தியை வெளியிட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பழுவூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர், 'பழுவூரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் வசிக்கிறோம். எங்களை வெளியேற்ற, வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தடை விதிக்க வேண்டும்.'அந்த

மதுரை : 'தவறு செய்யும் ஊழியர்களை காப்பாற்றும் நோக்கில், தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதிருப்தியை வெளியிட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பழுவூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர், 'பழுவூரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் வசிக்கிறோம். எங்களை வெளியேற்ற, வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தடை விதிக்க வேண்டும்.'அந்த இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது அதற்குரிய தொகையை பெற்று, இடத்தை வழங்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.ஏற்கனவே, நீதிபதிகள் விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு, 'மனுதாரர், அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர். அவரது மகன் முத்தரசன் அரசு டாக்டர். இதை மறைத்து, அரசிடம் மனுதாரர் குடும்பம், ஐந்து இலவச வீட்டுமனை பட்டாக்களை பெற்றுள்ளது. 'சஸ்பெண்ட்'மனுதாரர், மகன் முத்தரசன் மற்றும் பட்டா வழங்கிய தாசில்தார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவித்தது.நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு கூறியதாவது:மனுதாரர் மற்றும் தாசில்தார் தலா, 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.

இவர்கள் போன்ற பேராசை பிடித்தவர்களால் தான், தேசத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டு, இவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. ஊழியர்களுக்கு வேலை செய்யும் கலாசாரத்தை, தொழிற்சங்கங்கள் கற்றுத் தருவதில்லை. அப்படி கற்றுத் தந்தால் தான், நாடு முன்னேறும். தவறு செய்யும் ஊழியர்களை காப்பாற்றும் நோக்கில், தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. பணபலம், அதிகாரம், அரசியல் மற்றும் ஜாதி பின்புலம் உள்ளவர்கள் தான் தொழிற்சங்க பொறுப்புகளுக்கு வருகின்றனர்.

ஜாதிய ரீதியான தொழிற்சங்கங்களுக்கு எப்படி அரசு அனுமதி தருகிறது எனத் தெரியவில்லை. சில அரசியல் கட்சிகளுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை. அவர்களுக்கு சந்தாதான் முக்கியம். சில நல்ல தொழிற்சங்க தலைவர்களும் உள்ளனர். பணி நேரத்தைத் தாண்டி, இரவு வரை மற்றும் விடுமுறையில் பணிபுரியும் சில நல்ல ஆசிரியர்களும் உள்ளனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் வழக்குப் பதியவில்லை. அப்படி செய்தால், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வர் என அரசு அச்சப்படுகிறதா. அப்படி வேலை நிறுத்தம் செய்தால் எல்லாவற்றையும் நாங்கள் தடை செய்வோம்.

நாடு திருந்தாதுஇதுபோன்ற புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கனவே வைத்துள்ள சொத்துகளையும் சேர்த்து பறிமுதல் செய்ய வேண்டும். இல்லாவிடில் நாடு திருந்தாது. இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து, அதை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது, முன்னுதாரணமான வழக்கு. இவ்வாறு அதிருப்தி தெரிவித்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பட்டா மாறுதல் நடந்தபோது மனுதாரர் மகன் முத்தரசனுக்கு, 19 வயது. அவர் மனுவில் கையெழுத்திடவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக, முத்தரசனுக்கு எதுவும் தெரியாது. டாக்டரான அவர், கொரோனா தடுப்புப் பணியில் சிறந்த சேவை செய்துள்ளார்.இதனால் அவர் மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பு தெரிவிக்கிறது.இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் முத்தரசன் மனு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், கலெக்டர் தகுந்த முடிவெடுக்க வேண்டும்.மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் வங்கியில் எவ்வளவு தொகை டிபாசிட் செய்துள்ளனர். தாசில்தார் மற்றும் அவரது குடும்பத்தினர், வங்கியில் எவ்வளவு தொகை டிபாசிட் செய்துள்ளனர்?தாசில்தார், எதுவும் அரசு ஊழியர் சங்க பொறுப்பில் உள்ளாரா, இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,விற்கு முக்கியப் பங்கு இருந்தும் நடவடிக்கை இல்லை. வழக்கு பதிவுதாசில்தார், வி.ஏ.ஓ.,விற்கு எதிராக எதுவும் ஏற்கனவே துறைரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ளதா?மனுதாரர் மகனை அரசு அல்லது தனியார் பள்ளியில் படிக்க வைத்தாரா, வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் போதுமா, வழக்குப் பதிய வேண்டும். அதன் நகலை இந்நீதிமன்றத்தில் டிச., 7ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-டிச-202011:58:14 IST Report Abuse
Bhaskaran இந்த விவகாரத்தில் உண்டியல் குலுக்கிகள் சங்க தலைவர் சவுந்தரராஜன் தொழிற்சங்கத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார் .ஒரு niruvana tholilaali gal தங்கள் குறைகளை எடுத்துக்கூற ஒரு அமைப்பு அவசியம் .அது கட்சிசார்பில்லாததாக இருப்பது மிகமிக அவசியம் அதிலும் உண்டியல் குலுக்கிசங்கமாக இல்லாதிருப்பது மிகமிக மிக மிக அவசியம் .தொழிற்சங்கத்தை சார்ந்தவராக இருந்தால் சிலரால் வேலையில் ஒழுங்கீனம் மேல் அதிகாரிகள் உடன் தகராறு என்று ஆரம்பித்து நிறுவனத்தை மூடுவதுவரையில் செல்லும் ..நியாயங்களைப்பார்க்காமல் அநியாயத்துக்கு சார்ந்திருப்பார்கள் .நிறுவனங்களின் கஷ்டநஷ்டங்களை புரிந்துகொண்டுஊதிய உயர்வு போனஸ் மற்ற சலுகைகளை கேட்கணும் .இவர்களால் கிண்டி அம்பத்தூர் மறைமலைநகர் போன்ற தொழில்பேட்டைகளில் நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன .இதனால் இப்போது உண்டியல் குழுக்கிகளுக்குத் தொழிலாளர்களிடம் மதிப்பில்லை
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
01-டிச-202011:34:24 IST Report Abuse
R.RAMACHANDRAN நீதிபதிகள் அவர்களிடையே உள்ள குற்றவாளிகள், வழக்கறிஞ்சர்களிடையே உள்ள குற்றவாளிகளைக் காப்பது போல தொழிற் சங்கங்கள் அதனுடைய உறுப்பினர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும் காப்பாற்றுவதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.இந்த நாட்டில் நேர்மையானவர்களைக் காப்பது அரிதாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X