பொது செய்தி

தமிழ்நாடு

வேடந்தாங்கல் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு

Added : நவ 30, 2020
Share
Advertisement
சென்னை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வருவாய் துறையினர் தலையிட்டதால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, தண்ணீர் வருவதில் இருந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரிய சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று.ஆண்டு தோறும், 140க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து

சென்னை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வருவாய் துறையினர் தலையிட்டதால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, தண்ணீர் வருவதில் இருந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது, தமிழகத்தின் பாரம்பரிய சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று.ஆண்டு தோறும், 140க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து செல்கின்றன. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நீர் வராததால், இந்த ஆண்டு பறவைகள் சீசன் பாதிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், அதிகபட்ச மழை பெய்து, நீர் நிலைகள் நிரம்பிய நிலையில், வேடந்தாங்கலுக்கு மட்டும் தண்ணீர் வந்தடையவில்லை. நீர் வழிப்பதை தடுக்கப்பட்டுள்ளது குறித்து, நவம்பர், 28ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், வளையாபுத்துார் ஏரியை ஆய்வு செய்தனர். அங்கு, வேடந்தாங்கல் ஏரிக்கு செல்லும் கால்வாயில், சமூக விரோதிகளால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பு அகற்றப்பட்டது.இதனால், வளையாப்புத்துார் ஏரியின் உபரி நீர், வேடந்தாங்கல் ஏரிக்கு வர துவங்கியது. இது, வலசை பறவைகளுக்கும், வேடந்தாங்கல் மக்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X