வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பால்ராஜ், சண்முகப்பிரியா தம்பதி பலியாயினர்.
வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பழைய சித்துவார்பட்டியை சேர்ந்த பால்ராஜ் 42, சண்முகப்பிரியா 35, தம்பதியினர் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தனர். செம்மடைப் பட்டியில் வசிக்கும் சண்முகப்பிரியாவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் அவரை பார்க்க இருவரும், அவர்களின் சரக்கு ஆட்டோவில் சென்றனர். திண்டுக்கல் ரோட்டில், வடமதுரை சிக்காளிபட்டி பிரிவு அருகே சென்றபோது, ஒரு சக்கரத்தின் ஆக்சில் கட் ஆகி ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. நான்குவழிச்சாலை சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலே இறந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE