பொது செய்தி

தமிழ்நாடு

கட்டண விலக்கு: சிறு தொழில் சங்கம் வரவேற்பு

Added : நவ 30, 2020
Share
Advertisement
சென்னை : அரசு திட்டத்தின் கீழ் கடன் பெற, பிணை ஆவணம் பதிவு செய்யும் போது, செலுத்த வேண்டிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கும்படி, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ௨௦௧௦ மார்ச், 31 வரை, முத்திரை வரியிலிருந்து, தமிழக அரசு விலக்கு அளித்து உள்ளது. மேலும், நிதி நிறுவனங்கள்

சென்னை : அரசு திட்டத்தின் கீழ் கடன் பெற, பிணை ஆவணம் பதிவு செய்யும் போது, செலுத்த வேண்டிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கும்படி, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ௨௦௧௦ மார்ச், 31 வரை, முத்திரை வரியிலிருந்து, தமிழக அரசு விலக்கு அளித்து உள்ளது. மேலும், நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் மற்றும் கூடுதல் கடன்களுக்கான, ஆவணங்கள் வைப்புத் தொகை தொடர்பான ஒப்பந்தத்தை பதிவு செய்ய, செலுத்த வேண்டிய பதிவு கட்டணம், 1.0 சதவீதத்தில் இருந்து, 0.1 சதவீதமாகவும் குறைக்கப் பட்டுள்ளது.'இதன் வாயிலாக, தொழில் முனைவோர்களின் நிதிச்சுமை குறையும். பாதித்த தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கும். 'இத்தகைய தமிழக அரசின் உத்தரவை, தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்கம் வரவேற்கிறது' என, அதன் தலைவர் எஸ்.அன்புராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X