அகராதியில் அதிகம் தேடிய சொல் 'பேண்டமிக்'

Added : நவ 30, 2020
Share
Advertisement
நியூயார்க் : இந்தாண்டு, அமெரிக்காவின், 'மெரியம் - வெப்ஸ்டர்' அகராதி வலைதளத்தில், மிக அதிகமானோரால், பொருள் தேடப்பட்ட வார்த்தை என்ற சிறப்பை, 'பேண்டமிக்' பெற்றுள்ளது. லத்தீன் மற்றும் கிரேக்க வழி வந்த, 'பேண்டெமோஸ்' என்ற சொல்லின் திரிபுதான், 'பேண்டமிக்' என, ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதற்கு, தமிழில், பெருந்தொற்று அல்லது தொற்றுநோய் என, பொருள். 17ம் நுாற்றாண்டு

நியூயார்க் : இந்தாண்டு, அமெரிக்காவின், 'மெரியம் - வெப்ஸ்டர்' அகராதி வலைதளத்தில், மிக அதிகமானோரால், பொருள் தேடப்பட்ட வார்த்தை என்ற சிறப்பை, 'பேண்டமிக்' பெற்றுள்ளது.

லத்தீன் மற்றும் கிரேக்க வழி வந்த, 'பேண்டெமோஸ்' என்ற சொல்லின் திரிபுதான், 'பேண்டமிக்' என, ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதற்கு, தமிழில், பெருந்தொற்று அல்லது தொற்றுநோய் என, பொருள். 17ம் நுாற்றாண்டு மத்தியில், 'பிளேக்' என்ற கொடிய ஆட்கொல்லி நோய் பரவிய போது தான், பேண்டமிக் வார்த்தை பிரபலமானதாக கூறப்படுகிறது. இந்தாண்டு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பேண்டமிக் என்ற வார்த்தைக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டு, சர்வதேச அச்சு மற்றும் தொலைகாட்சி ஊடகங்களில் அன்றாடம் இடம் பெறும் சொல்லாக மாறியுள்ளது.

மெரியம் - வெப்ஸ்டர் ஆன்லைன் அகராதியில், இந்தாண்டு, ஜனவரி முதல், பேண்டமிக் வார்த்தைக்கு ஏராளமானோர் பொருள் தேடத் துவங்கி விட்டனர். எனினும், மார்ச், 11ல், 'கொரோனா வைரஸ், ஒரு பெருந்தொற்று நோய்' என, உலக சுகாதார நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்த பின்தான், பேண்டமிக் தொடர்பான தேடல் உச்சத்திற்கு சென்றுள்ளது. ''அன்று மட்டும், கடந்த ஆண்டின் அதே நாளில் தேடப்பட்டதை விட, 1.15 லட்சம் சதவீதத்திற்கும் அதிகமானோர், பேண்டமிக் சொல்லுக்கு, பொருள் தேடியுள்ளனர்;

அதனால், இந்தாண்டின் அதிகம் தேடிய சொல் என்ற சிறப்பு கிடைத்திருப்பதில் வியப்பில்லை,'' என்கிறார், மெரியம் - வெப்ஸ்டர் ஆசிரியர் பீட்டர் சோகோலோவ்ஸ்கி. கொரோனா வைரஸ் என்ற சொல், இந்த அகராதி வலைதளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றுள்ளது. எனினும், இந்த வைரஸ் குறித்து, உலக சுகாதார நிறுவனம் அறிவித்த, 'கோவிட் - 19' என்ற சொல், தற்போது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X