ராமநாதபுரம் : நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டுப் புழுக்கள்உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 22 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே இலை சுருட்டுப்புழுக்கள் நெற்பயிரில் தாக்குவது தெரிய வந்துள்ளது.அதிக தழைச்சத்து இடுவதால் இவ்வகை பூச்சிகளை பயிர் கவர்கிறது. எனவே உர பரிந்துரைப்படி ஏக்கருக்கு ஒரு மூடை யூரியாவை துார் கட்டும் பருவத்திலும், பூப் பிடிக்கும் பருவத்திலும் இரண்டாக பிரித்து இடவேண்டும்.
இலை சுருட்டுப் புழுக்கள் இலையை சுருட்டி அடிப்பகுதியில் பச்சயத்தை அரித்து உண்பதால் இலைகள் வெண்மையாக காணப்படும். இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருப்பதால் பூச்சிகள் உள்ளே இருந்து விடும். இதனால் பயிர் வளர்ச்சி குறையும். தீவிர தாக்கத்தால் வயல் முழுவதும் வெண்மையாக காய்ந்தது போல் காணப்படும்.ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை பின்பற்றி கட்டுப்படுத்த வேண்டும். தாய் அந்துப்பூச்சிகளை விளக்குபொறி அமைத்து அழிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE