அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளியே வந்து பாருங்க: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி

Updated : டிச 01, 2020 | Added : நவ 30, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: ''மக்களை வந்து பார்த்தால் தான், அரசு செயல்படுத்தும் திட்டங்கள், அதனால், மக்கள் அடைந்த நன்மைகள் தெரியும்,'' என, ஸ்டாலினுக்கு முதல்வர் இ.பி.எஸ்., பதில் அளித்தார். அவர் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போதும், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போதும், துாங்கி விட்டாரா? அவர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம், நாங்கள் தான் நிறைவேற்றி
ஸ்டாலின், முதல்வர்பழனிசாமி, எடப்பாடிபழனிசாமி, பழனிசாமி, மு.க.ஸ்டாலின், திமுகதலைவர் ஸ்டாலின்

சென்னை: ''மக்களை வந்து பார்த்தால் தான், அரசு செயல்படுத்தும் திட்டங்கள், அதனால், மக்கள் அடைந்த நன்மைகள் தெரியும்,'' என, ஸ்டாலினுக்கு முதல்வர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

அவர் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போதும், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போதும், துாங்கி விட்டாரா? அவர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம், நாங்கள் தான் நிறைவேற்றி வருகிறோம்.பாராட்ட மனம் இல்லாவிட்டாலும், பழி சுமத்தாமல் இருந்தாலே போதும். அவர், 'இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை' என்கிறார். துறை வாரியாக விருதுகளை பெற்றுள்ளோம். அரசு சிறப்பாக செயல்பட்டதால் தான், விருதுகளை பெற முடிந்தது.

அவர் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களை வந்து பார்த்தால் தான், என்ன திட்டம் நிறைவேற்றுகிறோம் என்று தெரியும். வீட்டிலிருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, கட்சியினரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கே கூட, 'கூலிங் கிளாஸ்' மற்றும் கைக்கு உறை போட்டு பேசுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு, அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தெரியாது.வெளியில் வந்து மக்களை பார்த்தால் தான், அரசு என்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளது; அதனால், மக்கள் என்ன நன்மை அடைந்துள்ளனர் என்ற, விபரம் தெரியும். அவற்றை தெரிந்து, அவர் பேசினால், நன்றாக இருக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-டிச-202017:06:54 IST Report Abuse
Malick Raja 2021 தேர்தலோடு இடப்படியிலேயே இருக்கவேண்டியதை மாற்றவோ மறுக்கவோ தடுக்கவோ முயவே முடியாது ..
Rate this:
Cancel
01-டிச-202017:31:15 IST Report Abuse
சம்பத் குமார் 1).DMK கூட்டணிக்கு தற்பொழுது இருக்கும் நிலையில் 60 சீட் தான் கிடைக்கும். தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகள் மற்றும் பிரச்சாரத்தினை பொருத்து maximum 75 சீட் தான் 2021 election ல் இந்த முறை கிடைக்கும். அதுவும் கடைசி நேரத்தில் சூழ்நிலைகள் சரியாக இல்லா விட்டால் 50 க்கு குறைவான சீட்டுகள் கிடைக்கும்.2). நல்ல ஒரு எதிர் கட்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து செயல்பட்டு இருந்தால் கண்டிப்பாக மக்கள் ஆதரவு அளிப்பார்கள். நாள் தோறும் காலை வணக்கம் போன்று குறை கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஸ்டாலின் அவர்கள் இப்பொழுது உண்மை கூறினால் கூட தற்பொழுது யாரும் அதை நம்ப மாட்டார்கள்.3). மக்கள் Android phone, so many apps, TV and other mediasவில் இருந்து நல்லது மற்றும் கெட்டது எது என்பதை கடந்த நான்கு ஆண்டுகளில் அறிந்து கொண்டார்கள். நாம் அவற்றுக்கு நன்றி சொல்ல வேண்டும்.4). ஸ்டாலின் அவர்கள் தினமும் மோடி மற்றும் எடப்பாடி அவர்களின் குறைக் கூறி அதன் மூலம் அவர்கள் இருவரையும் மக்களிடையே பிரபலம் அடைய செய்து விட்டார். மக்கள் பல் வேறு தகவல் தொழில்நுட்ப உதவியால் எது உண்மை என தெரிந்து கொண்டு விட்டனர்.5). நியாயமான தரப்பு வாதம் மற்றும் எதிர் காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்று இந்த முறை மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை என்றால் கண்டிப்பாக இந்த முறை ‌DMK 50க்கும் குறைவான சீட்டுகள் கிடைக்கும்.முதலில் நல்ல எதிர் கட்சியாக இருக்க வேண்டும். இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-டிச-202016:59:45 IST Report Abuse
sankaseshan வேத்துவேட்டு நீ ரொம்ப யோக்யம் நீயும் வேண்டாதவர்களை விமர்சனம் செய்கிறாய் மோசமாக சுடலை போனதால் GO வந்ததாம் காக்கை உக்கார பனம்பழம் விழுந்ததாம். ஆடி கார் அய்யாக்கண்ணு வோடு சுடலையும் டெல்லி போயிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X