முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத்சேலத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் முதுகுளத்துார் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கீழக்கரை சின்னமாயகுளத்தை சேர்ந்த அருள்மணி மகன் எடிசன் 23.முன்விரோததால் அக்.7ல் கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த கோபிநாத் 29,தேவகுமார் 23,ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களுக்கு சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட நிபந்தனையுடன் கோர்ட் ஜாமீன் வழங்கியது.
நவ.24 தேதி மாலை 5.30 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சூரமங்கலம் சாலையில் நடந்து வந்த போது 5 பேர் கொண்ட கும்பல் பழிக் குபழியாக கோபிநாத்தை வெட்டி கொலை செய்து தப்பினர்.ராமநாதபுரம் மாவட்டம்சின்னமாயகுளத்தை சேர்ந்த கார்த்திக் 21,விக்னேஷ் 22,ரமேஷ் 27 ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலைக்கு சம்மந்தபட்ட சின்னமாயகுளத்தை சேர்ந்த ஞானமுத்து மகன்கள் அந்தோணிராஜ் 37, அருள்மணி 47, முதுகுளத்துார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதி ராமசங்கரன் இருவரையும் சூரமங்கலம் போலீசில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE