பணியிலும் போராட்டம்.. ஓய்விலும் திண்டாட்டம்... போக்குவரத்து தொழிலாளர்களின் பரிதாப நிலை| Dinamalar

தமிழ்நாடு

பணியிலும் போராட்டம்.. ஓய்விலும் திண்டாட்டம்... போக்குவரத்து தொழிலாளர்களின் பரிதாப நிலை

Added : நவ 30, 2020 | கருத்துகள் (2)
Share
ராமநாதபுரம் : அரசு போக்குவரத்துதொழிலாளர்களுக்கு பணிக்காலத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள், சம்பள உயர்வு, அகவிலைப்படி கிடைக்காமல் தொடர்ந்து போராடும் நிலையில், ஓய்வுக்கு பிறகும் பணிக்கொடை, ஓய்வூதியம் கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்து கழகம் 1972ல் துவக்கப்பட்டது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை,
 பணியிலும் போராட்டம்.. ஓய்விலும் திண்டாட்டம்... போக்குவரத்து தொழிலாளர்களின் பரிதாப நிலை

ராமநாதபுரம் : அரசு போக்குவரத்துதொழிலாளர்களுக்கு பணிக்காலத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள், சம்பள உயர்வு, அகவிலைப்படி கிடைக்காமல் தொடர்ந்து போராடும் நிலையில், ஓய்வுக்கு பிறகும் பணிக்கொடை, ஓய்வூதியம் கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் 1972ல் துவக்கப்பட்டது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகியஏழு அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது உள்ளன.இதில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம்தான் தென்னிந்தியாவில் பெரியது. இது தவிர மாநில விரைவு பேருந்து கழகம் தனியாக செயல்படுகிறது. இவற்றில் 1.30 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் இறுதி வரை அரசு போக்குவரத்து கழகங்களில் 6220 பேர் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு வழங்கவேண்டியஓய்வூதிய பண பலன்களான பணிக்கொடை, விடுப்பு சம்பளம் சரண்டர்தொகை, கம்யூட்டேசன்தொகை உள்ளிட்ட ரூ.1050 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.கொரோனாவை காரணம்காட்டி 2020 ஏப்., பிறகு ஓய்வு பெற இருந்த பல ஆயிரம் பேருக்கு எந்த ஓய்வூதிய பலன்கள் வழங்க இயலாத நிலையில் மேலும் ஓராண்டிற்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மின்வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு 2020 ஏப்., வரை அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்கப்பட்ட நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களை மட்டும் வஞ்சிப்பதாக தொழிலாளர்கள் குறறம் சாட்டுகின்றனர்.2019 ஏப்., முதல் 2020 மார்ச் வரை ஓய்வு பெற்ற 6220 பேரில் 600 பேர் வரை ஓய்வூதிய பலன்களை பெறாமலேயே இறந்து விட்டனர். மேலும் பணிக்காலத்தின் போதும் 2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையும் இவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

போராட்டமே வாழ்க்கை:

பணிக்காலத்தில் வெயில், மழை, பண்டிகை விடுமுறை என எதுவும் இல்லாமல் மக்களுக்காக பணியாற்றும் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணியின்போதும் போராட்டமே வாழ்வாக கொண்டுள்ளனர்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பண பலன்களுக்காக பணிக்காலத்திலும் போராட்டமே இவர்களின் வாழ்க்கையாகிவிட்ட நிலையில், பணி ஓய்வுக்கு பிறகாவது நிம்மதியாக குடும்பத்தோடு வாழ முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது.போக்குவரத்து துறை டிரைவர், கண்டக்டர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை மிகக்குறைவுதான். ஒவ்வொருவரும் ரூ.10 ஆயிரம் வரை தான் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

பஸ்களை ஏலம் விடலாம்:

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை தவிக்கவிடும் போக்குவரத்து கழகத்தில் கண்டமாகி ஏலம் விடாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. கும்பகோணம் மண்டலம் தேவகோட்டை பழுது நீக்கும் பிரிவில் மட்டும் நுாற்றுக்கும் மேற்பட்ட பழைய பஸ்கள் துருப்பிடித்து வருகின்றன.இப்படி வீணாகும் பழைய பஸ்களை ஏலம் விட்டாலே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1050 கோடி பண பலன்களில் பாதித் தொகையை வழங்கி விடலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X