சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருவிகள் வாங்க அதிகாரிகள் நெருக்கடி மணல் லாரி உரிமையாளர்கள் புகார்

Added : நவ 30, 2020
Share
Advertisement
சென்னை : 'லாரிகளுக்கு தேவையான, ஒளிரும் பட்டை, வேக கட்டுப்பாட்டு கருவி, இருப்பிடம் காட்டும் கருவி போன்றவற்றை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும்' என, போக்குவரத்து துறையினர் கட்டாய படுத்துவதாக, மணல் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், எஸ்.யுவராஜ்

சென்னை : 'லாரிகளுக்கு தேவையான, ஒளிரும் பட்டை, வேக கட்டுப்பாட்டு கருவி, இருப்பிடம் காட்டும் கருவி போன்றவற்றை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும்' என, போக்குவரத்து துறையினர் கட்டாய படுத்துவதாக, மணல் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், எஸ்.யுவராஜ் கூறியதாவது:தமிழகத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில், எப்.சி., பரிசோதனையின் போது, தேர்ச்சி வழங்க, போக்குவரத்து துறை அதிகாரிகள், சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.சட்டப்படியான கட்டுப்பாடுகள் என்றால், அதை கடைப்பிடிக்க தயாராக இருக்கிறோம். அதனால், வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை, வேக கட்டுப்பாட்டு கருவி, இருப்பிடம் அறியும் கருவி போன்றவை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.இந்த கருவிகளை, தாங்கள் பட்டியலிட்டுள்ள குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும் என்றும், அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

இதற்கு ஆதாரமாக, சில உத்தரவுகளையும் அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.அதில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் விற்பனையை மேம்படுத்தும் மறைமுக நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது, லஞ்ச ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்த உத்தரவுகளை திரும்ப பெற, போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X