நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
பீஜிங் : நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கி, ஒரு நாள் பயணமாக நேபாளம் சென்றார். இது குறித்து, சீன பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:வெய் பெங்கி, நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா ஆகியோரை சந்தித்து பேசினார்.கொரோனாவால்,

பீஜிங் : நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.



latest tamil news



சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கி, ஒரு நாள் பயணமாக நேபாளம் சென்றார். இது குறித்து, சீன பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:வெய் பெங்கி, நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா ஆகியோரை சந்தித்து பேசினார்.கொரோனாவால், நிறுத்தப்பட்ட, நேபாளம் - சீனா இடையிலான ராணுவ பயிற்சியை மீண்டும் துவங்குவது குறித்து, பேச்சு நடத்தினார். நேபாள ராணுவத்தை மேம்படுத்த, சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, தெரிவித்தார்.


latest tamil news



'ஒரே சீனா' கொள்கைக்கு நேபாளம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அதுபோல, இதர நாடுகளும், தைவான், திபெத் ஆகியவை, சீனாவின் அங்கம் என்பதை ஏற்க வேண்டும். திபெத்தியர்கள், இந்தியாவில், தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவை சந்திக்க செல்வதை, நேபாளம் தடுத்து நிறுத்த வேண்டும். நேபாளத்தின் சுதந்திரம், இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு ஆகியவற்றின் பாதுகாப்புக்கு, சீனா ஆதரவளிக்கும் என, வெய் பெங்கி கூறினார்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




கடந்த மாதம், இந்திய ராணுவ தளபதி நரவானே நேபாளம் சென்றார். இதைத் தொடர்ந்து, நேபாளத்திற்கு, வெய் பெங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
01-டிச-202019:40:45 IST Report Abuse
RajanRajan நேபாளத்தின் இறையாண்மை பற்றி பேச இந்த சீனன் என்ன நேபாள் தேச பிரஜையா??? இவன் பேசுவது அப்பட்டமான ஒரு ஆக்கிரமிப்பு திட்டம் போடுறான். உசார்.
Rate this:
Cancel
Rajesh - Delhi,யூ.எஸ்.ஏ
01-டிச-202018:35:19 IST Report Abuse
Rajesh திபெத்தின் நிலைமை கூடியசீக்கிரத்தில் நேபாளத்திற்கு நடக்கும்
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
01-டிச-202014:51:31 IST Report Abuse
Thirumal Kumaresan இவனுங்களை நேபாளம் நம்பினால் அது இல்லாமல் போகும் ஜாக்கிரதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X