சென்னை : குறைந்த விலை வீடுகளுக்கு முத்திரைத்தீர்வை, பதிவு கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான திட்டத்தை, தேசிய வீட்டுவசதி வங்கி உருவாக்கி உள்ளது.
நாடு முழுதும், குறைந்த விலை வீடுகள் விற்பனையை ஊக்கப்படுத்த, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதற்கான கட்டமான திட்டங்களை விரைந்து முடிக்க, சிறப்பு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன.இருப்பினும், பெரிய திட்டங்களுக்கும், குறைந்த விலை வீடுகளுக்கும், கட்டணங்களில் வேறுபாடு இல்லாதது குறையாக உள்ளது.எனவே, இதற்கு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்; கட்டுமான திட்ட அனுமதி கட்டணம், சொத்து வரி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் போன்றவற்றில் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:தேசிய வீட்டு வசதி வங்கி, முத்திரை தீர்வை, கட்டண குறைப்புக்கான சிறப்பு திட்டத்தை உருவாக்கி வருகிறது. கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றப்படும் கட்டணங்கள், முத்திரை தீர்வை அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், புதிய வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரப்பளவு, விலை அடிப்படையில் குறைந்த விலை, வீடுகளுக்கு குறைந்தபட்ச முத்திரைத்தீர்வை, பதிவு கட்டணம் வழிவகுக்கப்படும். தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தும் வகையில் இதற்கான அறிவிப்பு இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE