பரமக்குடியில் சேதமடைந்த சர்வீஸ் ரோடு

Added : டிச 01, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றின் இரண்டு கரைகளில் அமைக்கப்பட்டசர்வீஸ் ரோடு சேதமடைந்து வரும்நிலையில், மின்விளக்குகளின்றி இரவில் தடுமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.பரமக்குடி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாகன பெருக்கத்தால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வைகை ஆற்றின் இரண்டு கரைகளிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. ஐந்து

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றின் இரண்டு கரைகளில் அமைக்கப்பட்டசர்வீஸ் ரோடு சேதமடைந்து வரும்நிலையில், மின்விளக்குகளின்றி இரவில் தடுமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.

பரமக்குடி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாகன பெருக்கத்தால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வைகை ஆற்றின் இரண்டு கரைகளிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரோட்டில் எந்த பராமரிப்பும் செய்யப்படாமல் உள்ளது.ரோட்டோரங்களில் செடிகள், கருவேலமரம் வளர்ந்து உள்ளன.

மேலும் மழை காரணங்களால் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகி வருகிறது.25க்கும் மேற்பட்ட தெருக்கள் சர்வீஸ் ரோட்டை குறுக்கிடுகின்றன. இவற்றில் மின் விளக்குகள் பொருத்த படாமல் இருள் சூழ்ந்த நிலையே நீடிக்கிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைத்து மின் விளக்குகளை பொருத்தி எளிதான பயணத்திற்கு வழி வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X