சிவகங்கை : இளையான்குடி அருகே கருஞ்சுத்தியில் வீச்சரிவாளை காட்டி டூவீலரில் இரு ஆடுகளை திருடிச்சென்ற சம்பவம் 'சோசியல் மீடியாவில்' வேகமாக பரவி வருகிறது.
இளையான்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். விவசாயநிலங்களுக்கு உரம் வழங்கும் பொருட்டு, காட்டிற்குள் கிடை அமைத்து, இரவில் ஆடுகளை தங்க வைக்கின்றனர். இதற்கு பாதுகாப்பாக ஆடு வளர்ப்போர் சிலரும் தங்குவர். சில நாட்களாக இம்மாவட்டத்தில் வீச்சரிவாள்களுடன் நள்ளிரவில் டூவீலரில் வரும் கும்பல் கிராமப்புற கிடையில் உள்ள ஆடுகளை திருடிச்செல்வது வாடிக்கையாகி வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு இளையான்குடி அருகே கருஞ்சுத்தியில் ஆடு வளர்ப்போர் போட்ட கிடையில் இருந்து வீச்சரிவாளுடன் டூவீலரில் வந்த இருவர் இரண்டு ஆடுகளை திருடி தப்பித்தனர். அவர்களை மற்றொரு டூவீலரில் விரட்டி சென்றனர். அப்போது ஆடு திருடியவர்கள் வீச்சரிவாளை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி தப்பிக்கும் காட்சி 'சோசியல் மீடியாக்களில்' பரவி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE