பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு 94 லட்சமாக உயர்வு

Added : டிச 01, 2020
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று, 94.31 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில், 94 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 8.76 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதன் முடிவில், 38 ஆயிரத்து, 722 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுடில்லி : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று, 94.31 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில், 94 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 8.76 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதன் முடிவில், 38 ஆயிரத்து, 722 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 94 லட்சத்து, 31 ஆயிரத்து, 691 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 4.47 லட்சம் பேர், தற்போது சிகிச்சை பெறுகின்றனர். இவர்களின் விகிதம் மொத்த பாதிப்பில், 4.74 சதவீதமாக உள்ளது. '

மத்திய - மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, 88 லட்சத்து, 47 ஆயிரத்து, 600 ஆக உயர்ந்துள்ளது; மீட்பு விகிதம், 93.81 சதவீதமாக பதிவாகி உள்ளது.கொரோனா பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், 443 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 85 பேர் பலியாகி உள்ளனர். டில்லியில், 68; மேற்கு வங்கத்தில், 54; கேரளாவில், 27; ஹரியானாவில், 26 மற்றும் உத்தர பிரதேசத்தில், 24 இறப்புகள் பதிவாகி உள்ளன.

கொரோனாவால் இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 139 ஆக உயர்ந்துள்ளது; உயிரிழப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது.அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 47 ஆயிரத்து, 071 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவில், 11 ஆயிரத்து, 765 பேரும், தமிழகத்தில், 11 ஆயிரத்து 703 பேரும் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X