சென்னை : ''தமிழக காங்கிரசார் கடுமையான உழைப்பை செலுத்தினால், கட்சி மேலும் வலிமை பெற நிறைய வாய்ப்புள்ளது,'' என, காங். எம்.பி., ராகுல் பேசினார்.
தமிழக காங்., முன்னணி தலைவர்கள், எம்.பி.,க்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன், காங்., முன்னாள் தலைவர் ராகுல், பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.
அக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக, காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும், வலிமை மிக்க கட்சியாக திகழ்கிறது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் வாயிலாக, கட்சி மேலும் வலிமை பெற, நிறைய வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியால், தற்போது பாதிக்கப்பட்டு வரும், தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற வகையில், வரும் சட்டசபை தேர்தல் அமைய கட்சியினர் அனைவரும், கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இத்தகவலை, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE