பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்., துணை ஜனாதிபதி வெங்கையா விளாசல்

Added : டிச 01, 2020
Share
Advertisement
புதுடில்லி : ''பயங்கரவாதத்தை, தேசியக் கொள்கையாக வைத்துள்ள நாடுகளால், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது,'' என, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடுமையாக சாடினார். மாநாடுஎஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை, அமைப்பின் தலைமை பொறுப்பில் தற்போது உள்ள இந்தியா நடத்துகிறது. 'வீடியோ

புதுடில்லி : ''பயங்கரவாதத்தை, தேசியக் கொள்கையாக வைத்துள்ள நாடுகளால், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது,'' என, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடுமையாக சாடினார்.

மாநாடுஎஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை, அமைப்பின் தலைமை பொறுப்பில் தற்போது உள்ள இந்தியா நடத்துகிறது. 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்த இந்த மாநாட்டை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. பயங்கரவாதத்தை தன் தேசியக் கொள்கையாக வைத்துள்ள நாடுகள் குறித்து, இந்தியா தன் கவலையை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

பயங்கரவாதம், சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.பல நாடுகள் இடம்பெற்ற இந்த அமைப்பில், இரு தரப்பு பிரச்னையை, சில நாடுகள் முன்வைப்பது துரதிர்ஷ்டவசமானது; அது இந்த அமைப்பின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக உள்ளது. பங்கேற்க அழைப்புஇந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும், இந்தியாவுக்கு நீண்ட கால தொடர்பு உள்ளது. வரும், 2025க்குள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 350 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். உலகில் மிகவும் இளமையான நாடாகவும் இந்தியா இருக்கும்.

இந்தியர்களின் சராசரி வயது, 29ஆக இருக்கும்.கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகள் சரியான பாதையில் செல்கின்றன. அதே நேரத்தில், பொருளாதார ஸ்திரதன்மையையும் உறுதி செய்கிறோம். உலகிலேயே, வைரசால் பலி விகிதம், இந்தியாவில் தான் குறைவாக உள்ளது. இதை உலக நாடுகள், அமைப்புகள் அங்கீகரித்துள்ளன.இந்த அமைப்பின், 20ம் ஆண்டையொட்டி, அடுத்த ஆண்டில், எஸ்.சி.ஓ., உணவுத் திருவிழாவை நடத்த இந்தியா முன்வந்துள்ளது. அதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X