பொது செய்தி

தமிழ்நாடு

வானிலிருந்து 12,000 முறை குதித்து தேனி வீரர் சாதனை: பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020
Share
Advertisement
தேனி : வானில் இருந்து 12,000 முறை குதித்து சாதனை படைத்த தேனி மாவட்டம் பெரியகுளம் வீரர் ராஜ்குமார் 44, பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.பெரியகுளம் வடகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியபோது வான்வெளி சாகசத்திற்காக தேர்வான 5 வீரர்களில் இவரும் ஒருவர். 2006 முதல் 2010 வரை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த
வான், 12,000, தேனிவீரர், சாதனை, பத்மஸ்ரீ, விருது, பரிந்துரை

தேனி : வானில் இருந்து 12,000 முறை குதித்து சாதனை படைத்த தேனி மாவட்டம் பெரியகுளம் வீரர் ராஜ்குமார் 44, பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் வடகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியபோது வான்வெளி சாகசத்திற்காக தேர்வான 5 வீரர்களில் இவரும் ஒருவர். 2006 முதல் 2010 வரை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த சர்வதேச வான்வெளி சாகச போட்டிகளில் ராஜ்குமார் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். விமானம், ெஹலிகாப்டர் மூலம் 13,000 அடி உயரத்தில் பறந்து அங்கிருந்து கீழே குதித்து ஒருசில வினாடிகளில் குழுவினருடன் இணைந்து டைமண்ட், சர்க்கிள் வடிவில் சாகசங்களை நிகழ்த்தினார்.

பணி ஓய்வுக்கு பின் வான்சாகசத்தில் ஆர்வமுள்ள மக்களுக்குபயிற்சி அளிக்க ம.பி. போபாலில் முதல் பயிற்சி பள்ளியை துவங்கியவர் மைசூரு, புதுச்சேரி, உ.பி. அலிகார், ஹரியானா நர்னோலில் பயிற்சி அளிக்கிறார்.

இவர் 72 மணி நேரத்தில் 8000 முறை வானில் இருந்து குதித்து சாகசம் செய்ததை பாராட்டி 2016ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்த மத்திய அரசின் 'டென்சிங் நார்கே' எனும்உயரிய விருது பெற்றார். இது அர்ஜூனா விருதுக்கு சமமானது.

தேனி வந்த ராஜ்குமார் கூறுகையில், ''2006 முதல் 2020 வரை 92 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 12,000 முறை வானில் குதித்த சாகசத்தை கடந்த வாரம் முடித்தேன். இச்சாதனையை பாராட்டி பத்மஸ்ரீ விருதுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது பெருமையாக உள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X