தேசத்தை காப்பதற்காகவும், தமிழகத்தை காப்பதற்காகவும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தும், தெய்வீக தமிழக சங்கம், 14 பக்கங்களை கொண்ட புத்தகங்களை, கோவையில் வீடு வீடாக வினியோகித்து வருகிறது.
தண்டுமாரியம்மன் கோவில் தயார்
கோவை டி.கே.மார்க்கெட் வளாகத்திலுள்ள உப்புமஞ்சள் கோவில் என்றழைக்கப்படும் தண்டுமாரியம்மன் கோவில், புனருத்தாரண பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையிலுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச்சில் நடத்த முடியவில்லை. தற்போது கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி மனுபஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி, சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சியினர், நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், 'ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி சிஞ்சுவாடி கிராம பகுதியில், பஞ்சமி நிலத்தை சிலர் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ஆக்கிரமித்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். நிலத்தை மீட்டு, அருந்ததியர் மக்களுக்கு வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்கோவை கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், டில்லியில் விவசாயிகள் மீது போலீசார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி கூறுகையில், ''டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு, ஆதரவை தெரிவிக்கின்றோம். கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE