கோவை:நீர் நிலைகள் அனைத்தும் நிரம்ப வேண்டி, கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வு, கோவையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் நடந்தது.கோவை சின்னவேடம்பட்டி ஏரி, கானுார் ஏரி, கீரணத்தம் ஏரி, அக்ரஹார சாமக்குளம், தெற்கு பகுதியில் அமைந்துள்ள கோதவாடி குளம் ஆகியவற்றில், அந்தந்த நீர்நிலை பயனாளர்களின் மூலம், தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி வழிந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. அவற்றில் மீண்டும் நீர் நிறைய, இயற்கையிடம் வேண்டும் வகையில், தன்னார்வலர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராஜா கூறுகையில், ''நீர் நிலைகள், நமது வளம் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, 'கவுசிகா நீர் கரங்கள்' சார்பில் ஏரி, குளங்களில் தீபம் ஏற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது.''அதை ஏற்று, ஏராளமானோர் நீர் நிலைகளில் தீபமேற்றி வழிபட்டனர். இனிவரும் காலங்களில் தொடர்ந்து பல்வேறு நீர்நிலைகளில் தீபம் ஏற்றி, வழிபடும் நிகழ்வை கொண்டாடுவோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE