பொது செய்தி

தமிழ்நாடு

தாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: 'பள்ளிகளை திறந்து பாடம் நடத்துவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.முதல்வர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் அனுப்பியுள்ள மனு விபரம்: கொரோனா தொற்று பரவியதால், 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை;
School, Reopen, Private School, பள்ளிகள், திறப்பு, தனியார் பள்ளிகள் சங்கம், கோரிக்கை

சென்னை: 'பள்ளிகளை திறந்து பாடம் நடத்துவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் அனுப்பியுள்ள மனு விபரம்: கொரோனா தொற்று பரவியதால், 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை; மாணவர்களுக்கு பாடங்கள் சரியாக நடத்தப்படவில்லை.

உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், நர்சரி, பிரைமரி பள்ளிகளில், பலர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை; மெட்ரிக் பள்ளிகளில், 80 சதவீதம் பேர் கட்டவில்லை. இதனால், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது; கிராமங்களில் பலர், தினக்கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.


latest tamil news


ஏழை, கிராமப்புற மாணவர்கள் இணையதள வசதி இல்லாமல், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை. பல மாணவர்கள் படிப்பை மறக்கும் சூழல் உள்ளது. கல்வி கட்டமைப்பு சீரழிந்து விட்டால், நாடும் சீரழிந்து விடும். அதுபோன்ற தவறுகள், தங்கள் ஆட்சியில் நடந்து விடக்கூடாது. பல மாநிலங்களில், பல நாடுகளில், பள்ளிகள் திறந்து கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடக்கின்றன. எனவே, அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றி, முக கவசம் அணிந்தவாறு, பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில், 50 சதவீத மாணவர்கள், புத்தகம் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார். எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, பள்ளிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-டிச-202019:11:05 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan திருப்பூர் பாரதிதாசன் தூங்குகிறாரா. தனியார் பள்ளிகள் சட்டத்தை மதிக்காது முழுக்கட்டணம் வசூலித்துவிட்டனர். கொள்ளயடித்துவிட்டு ஆசிரியருக்கு சம்பளம் தராமல் ஏமாற்றுவது அனைவரும் அறிந்ததே.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-டிச-202019:07:52 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஆமாம் அப்போதுதான் பஸ் கட்டணம் யூனிபார்ம் கட்டணம் என்று கொள்ளையடிக்க முடியும்
Rate this:
Cancel
sankaranarayanan - K.K.Valasi, Tenkasi,இந்தியா
01-டிச-202016:09:55 IST Report Abuse
sankaranarayanan பள்ளிகள் திறப்பது ஒருபுறமிருக்க, பள்ளிகள் தேவையா என்ற எண்ணம் வருகிறது. எதிர்சொல் தருக என்பதற்க்கு சரியான உதாரணம் அரசுப்பள்ளி,தனியார் பள்ளிகள் உள்ளன. இயற்கையால் மேடு பள்ளம் உருவாவது போல் படித்தவர் வாழ்வில் பொருளாதார ஏற்ற இறக்கம் சம்பளம் பெறுவதில் உள்ளது .இதற்கு மனிதர்கள் தான் காரணமே தவிர வானில் உள்ள கோள்கள் அல்ல. கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகி விட கூடாது என்ற கருத்தை விட இன்று பள்ளிகள் தான் கொள்ளையர்களின் கூடாரமாகி உள்ளது - (சில நல்ல பள்ளிகளை தவிர.) முந்திய காலத்தில் படிக்காமல் ஏமாற்றம். இன்று படித்து தெரிந்தே ஏமாறுகிறோம்.குறைகள் நிறைய இருக்கிறது நம் சமுதாயத்தில். நாம் ஒழுக்கமாக , நல்ல பண்புள்ள மனிதர்களாக வாழ நிறைய நூல்கள், நல்ல தலைவர்கள் , கோவில்கள் உள்ளது .காலமும் அவகாசம் தருகிறது. நம்மை நாம் நேர்மையான, நல்ல மனிதர்களாக மாற்றிக் கொள்ளாவிடில், காலம் அதை முடித்து வைக்கும். We must change our bad habits before the time punishes. படித்தவர்கள் பிறரை ஏமாற்றும் (பண விஷயத்தில் )நிலை மாற வேண்டும். இன்று நிறைய தனியார் பள்ளிகளில் எட்டு மாதமாக சம்பளம் இல்லை. சில பள்ளிகளில் 50% or 70% என்று அவர்கள் status க்காக கொடுக்கிறார்கள் . நிறைய மெட்ரிக் பள்ளிகளில் நூலக வசதி அறவே இல்லை.16 வகை செல்வங்கள் உள்ளன . பணம் மட்டும் அல்ல. இயற்கை நமக்கு தேவையானதை இன்று வரை இலவசமாக தருகிறது. காலம் தண்டனையை சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பித்துவிட்டது . discipline and devotion need in everybody life. All school's should re as soon as possible for students life. THANK YOU .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X