கோவை:ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.இருசக்கர வாகன ஒட்டிகளும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம், ஹெல்மெட் அணிய வேண்டுமென்ற உத்தரவு, ஏற்கனவே அமலில் உள்ளது. இச்சூழலில், அடுத்தாண்டு ஜூன், 1ம் தேதி முதல் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.'ஹெல்மெட்' விற்பனையாளர்கள் கூறுகையில், 'இந்த அறிவிப்பின்படி, இனி விற்பனைக்கு வரும் அனைத்து ஹெல்மெட்டுகளும், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றவையாக இருக்கும். இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளின் பயணம், மேலும் பாதுகாப்பானதாக இருக்கும்' என்றனர்.கோவை சாலையோரங்களில், தரமற்ற ெஹல்மெட்டுகள், மலிவான விலைக்கு விற்கப்படுகின்றன. இவற்றை தடுக்க, போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE